பொது செய்தி

இந்தியா

நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்: முகமது ஷமிக்கு ராகுல் ஆதரவு

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (78)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை டி-20 போட்டியில், சரியாக பந்து வீசாத இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சித்து வரும் நிலையில், 'நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்' என ஷமிக்கு ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.துபாயில் நடந்த உலக கோப்பை டி-20 போட்டியில், பாகிஸ்தானுடன் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி 10 விக்கெட்
Mohammad Shami, Rahul Gandhi, T20 World Cup 2021, Congress,Rahul

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை டி-20 போட்டியில், சரியாக பந்து வீசாத இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினரை விமர்சித்து வரும் நிலையில், 'நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்' என ஷமிக்கு ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.


latest tamil newsதுபாயில் நடந்த உலக கோப்பை டி-20 போட்டியில், பாகிஸ்தானுடன் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி, 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கினார். இதனையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு ஷமியின் பந்துவீச்சும் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் மோசமான கருத்துக்களை பதிவிட்டனர்.


latest tamil news


இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஷமிக்கு ஆதரவாகவும், கிரிக்கெட் வீரர்கள் பலரும் டுவிட் செய்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஷமிக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் செய்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ''முகமது ஷமி.. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்களுக்கு யாரும் அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள்'' என பதிவிட்டு ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-அக்-202103:50:28 IST Report Abuse
meenakshisundaram ஐயா எல்லோரும் உஷார் இப்போ பதவி எதுவும் இல்லாம (மக்களும் தேர்ந்தெடுக்க மாட்டேன்கிறாவுலே ) 'சும்மா 'இருக்கும் ராகுல் மட்டையை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாருன்னா ?
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
28-அக்-202110:13:10 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM இந்த முட்டாள் தேய்வையில்லாமல் ஆதரித்து காங்கிரெஸ்ஸை ஒரு வழியாக்கிவிடும் தலைவரை தெரிந்து எடுக்க தெரியவில்லை சாமிக்கு அதர்வா சமி நல்ல விளையாடினால் ஆதரவும் சரியாக விள்ளயவிட்டால் டினால் தவறி சுட்டிக்காட்ட தெரிவிக்க வேண்டும்
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
26-அக்-202119:17:37 IST Report Abuse
rishi பெரோஸ் கஹானின் பேரன் ராகுல் , ஆதரவு தருவது ஒன்னும் ஆச்சரியம் இல்லை . நீ பாகிஸ்தானுக்கு ஆதரவா கூட ட்விட் போடு உன்னை யாரு இங்க கண்டுக்க போறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X