முல்லை பெரியாறு அணை குறித்து பொய் பரப்புரை: பினராயி எச்சரிக்கை

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாக, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கேரள சட்டசபையில் நேற்று (அக்.,25) நடந்த விவாதத்தின் போது பினராயி விஜயன் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,
Pinarayi Vijayan, Mullaperiyar dam, rumours, Kerala CM

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாக, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கேரள சட்டசபையில் நேற்று (அக்.,25) நடந்த விவாதத்தின் போது பினராயி விஜயன் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் பலியாகப் போகிறார்கள் எனவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அணை நல்ல நிலையில் இருக்கிறது. ஆபத்து எதுவும் இல்லை. பொய் தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil news



முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதிலும் கேரள அரசு உறுதியாக உள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. சில விவகாரங்களில் மட்டும் தமிழக அரசுடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. அதுவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
26-அக்-202111:12:47 IST Report Abuse
Nellai tamilan அணை உறுதியாக இல்லை என்று மத்திய அரசிடம் புகார் சொன்ன பினராயி இப்போது மாற்றி பேசுவதை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு சதி செயலுக்கு திட்டம் போடுகிரார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது
Rate this:
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
26-அக்-202109:10:13 IST Report Abuse
T M S GOVINDARAJAN அதிமுக ஆட்சியில் பலமிலந்த அணை திமுக ஆட்சியில் பலமாகி விட்டது இனிமேல் எப்பவும் இந்த அணை பலமாக இருக்கும் இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-அக்-202108:13:53 IST Report Abuse
duruvasar கரெக்ட். நாம் இப்ப ஆளும் கட்சி. எதிர்கட்சியாக இருந்தால் நாமே முன்னின்று இந்த விஷயத்தை கட்டமைக்கலாம். இரத்தம்/ தக்காளி சட்னி இதுதான் வாழ்வியல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X