இந்தியா-இலங்கை கூட்டு பயிற்சி; 6 இந்திய போர்க்கப்பல்கள் இலங்கை சென்றன

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொழும்பு-கூட்டு பயிற்சிகளில் ஈடுபட இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.கொழும்பு மற்றும் திரிகோணமலை

கொழும்பு-கூட்டு பயிற்சிகளில் ஈடுபட இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.



latest tamil news


இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுக பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த கப்பல்கள், இலங்கை கடற்படை கப்பல்களுடன் வரும் நாட்களில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.


latest tamil news


இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவுக்கான துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கைக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை தந்துள்ளது, இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வு. இவ்வளவு கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.இருநாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் இந்த பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டு கடல் பகுதிக்கு இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
26-அக்-202114:46:16 IST Report Abuse
Anand கள்ள தோணி கூட்டம் ரொம்ப காண்டாகிவிடும்..
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
26-அக்-202113:08:02 IST Report Abuse
r ravichandran எப்படியும் நாளைக்கு திருமாவளவன், வேல்முருகன், வைகோ, போன்றவர்கள் இதை எதிர்த்து அறிக்கை விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
26-அக்-202109:49:26 IST Report Abuse
S. Bharani வரவேற்போம்.... இலங்கை இந்தியாவின் பிடியில் இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X