சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லீஸ் அணைக்கட்டு உடைந்து சேதம்: அதிகாரிகளின் அலட்சியம் என புகார்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரண மாக பழமை வாய்ந்த எல்லீஸ் அணைகட்டு உடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டு கட்டப்பட்டது.இந்த அணைகட்டின் வலது மற்றும்
 எல்லீஸ் அணைக்கட்டு உடைந்து சேதம்:  அதிகாரிகளின் அலட்சியம் என புகார்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரண மாக பழமை வாய்ந்த எல்லீஸ் அணைகட்டு உடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டு கட்டப்பட்டது.இந்த அணைகட்டின் வலது மற்றும் இடதுபுறம் பகுதியில் தலா 4 ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.அணைகட்டின் வலதுபுறம் உள்ள வாய்க்கால் மூலம் ஏரளூர் வாய்க்கால், ரெட்டி வாய்க்கால், ஆழங்கால் வாய்க்கால், மரகதபுர ஆகிய கிளை வாய்க்காலுக்கு எல்லீஸ் அணையின் வழியாக தண்ணீர் செல்து வழக்கம்.


latest tamil news



இந்த அணைகட்டின் மூலம் 20,500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதியும், பல்வேறு கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.அணைக்கட்டின் மேற்கு பகுதியில் சில நாட்களாக பெய்துவரும் மழையால் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

கடந்த 19ம் தேதி சாத்தனுார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், நீர் வரத்து அதிகரித்தது.தண்ணீரின் வேகம் காரணமா மோசமான நிலையில் இருந்த எல்லீஸ் அணைகட்டு நேற்று முன்தினம் மண் அரிப்பு ஏற்பட்டு வலதுகரையில் உள்ள மூன்று ஷட்டர்களில் கீழ் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் ஷட்டர்கள் விழும் நிலையில் உள்ளது. எனவே தண்ணீரை தேக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு தண்ணீர் வீணாவதை தடுக்க மணல் மூட்டைகளை போட்டு சரி செய்ய உத்தரவிட்டார்.அணைக்கட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தாண்டு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலமும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழை காலத்திற்கு முன்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கட்டை பார்வையிட்டிருந்தால் தடுப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.அதிகாரிகளின் அலட்சியமே அணைகட்டில் உடைப்பு ஏற்பட்பட்டதற்கு காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
26-அக்-202121:43:36 IST Report Abuse
BASKAR TETCHANA எல்லிஸ் ஆணை மீது அணில்கள் அதிகம் ஓடி இருக்கும் அதனால் உடைந்து விட்டது. நம்ம அணில் மந்திரியாரிடம் சொன்னால் எல்லாம் சரியாகி விடும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-அக்-202115:55:13 IST Report Abuse
r.sundaram இந்த வருடம் ஆற்றுநீர் இன்மையால் பயிர் பொய்த்துப்போனால், பொதுப்பணித்துறை மீது விவசாயிகள் வழக்கு தொடுக்க வேண்டும். நஷ்ட்ட ஈடு கேட்ட்க வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் திருத்துவர்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-அக்-202114:18:18 IST Report Abuse
Ramesh Sargam போச்சுடா... இப்ப என்ன ஆகும் என்றால், இதை ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி என்று அரசு பல கோடிகளுக்கு டெண்டர் அறிவித்து, அதில் பாதிக்குமேல் ஆட்டை போட்டு விட்டு, ஏதோ ஒரு சில இடத்தில் சிமெண்ட் பூசி, ரிப்பேர் செய்தாயிற்று என்று ஏமாற்றி ஊழல் செய்வார்கள். இது நமக்கு தேவையா...?
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்கொள்ளையை தவிர்க்க அப்படியே விட்டுவிடுவதே மேல் மீண்டும் ஒருவேளை இவர் யோக்கியமான அரசு என்று கருதும் அரசு ஏதேனும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறாரோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X