பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவ மழை

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021
Share
Advertisement
சென்னை : தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை நேற்று துவங்கி உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவ மழை, ஜூன் 3ல் துவங்கி, பல மாநிலங்களில் பரவலாக பெய்துள்ளது. வழக்கத்தை விட 11 சதவீதம் கூடுதலாக, தமிழகத்தில் பெய்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை நேற்றுடன் விலகி, வடகிழக்கு பருவ மழை துவங்கி விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மைய

சென்னை : தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை நேற்று துவங்கி உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



latest tamil news



தென்மேற்கு பருவ மழை, ஜூன் 3ல் துவங்கி, பல மாநிலங்களில் பரவலாக பெய்துள்ளது. வழக்கத்தை விட 11 சதவீதம் கூடுதலாக, தமிழகத்தில் பெய்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை நேற்றுடன் விலகி, வடகிழக்கு பருவ மழை துவங்கி விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஜெனரல் பாலச்சந்திரன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை, இந்த மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயல்பு அளவான, 44 செ.மீ., அளவுக்கு, வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில், மிதமான மழை பெய்யும்.தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் இன்று, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.


latest tamil news



இது மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.இதன் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், இடி, மின்னலுடன் நாளை கன மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.வரும் 28 மற்றும், 29ம் தேதிகளில், டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்.தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் வீசும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X