பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடியில் குளறுபடியால் போராட்டம்: ஒருங்கிணையும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
உடுமலை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், அடங்கல் பதிவேடு குளறுபடிகளை காரணமாக தெரிவித்து, பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதால், ஆயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, உடுமலை பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்; தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில், ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு
பயிர்க்கடன், தள்ளுபடி, குளறுபடி, போராட்டம்,  விவசாயிகள்,

உடுமலை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், அடங்கல் பதிவேடு குளறுபடிகளை காரணமாக தெரிவித்து, பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதால், ஆயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, உடுமலை பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்; தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில், ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 50,087 விவசாயிகள், விளைநிலங்களில், பல்வேறு சாகுபடிகளை, மேற்கொள்ள, பயிர்க்கடன் பெற்றிருந்தனர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் பெற, கம்ப்யூட்டர் சிட்டா, வி.ஏ.ஓ., விடம் பெறப்படும் அடங்கல், உரிமைச்சான்று உட்பட ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். இதில், அடங்கல் பதிவேட்டில், குறிப்பிடப்படும், சாகுபடியை பொறுத்து, பயிர்க்கடன் தொகை, கூட்டுறவு சங்கத்தில், ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உதாரணமாக, மானாவாரி பயிர்களுக்கு குறைந்தளவும், தோட்டக்கலை மற்றும் தென்னை உட்பட நீண்ட கால பயிர்களுக்கு, கூடுதலாகவும், பயிர்க்கடன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


துவக்கமே குழப்பம்


தமிழக அரசு விவசாயிகள், பெற்றிருந்த பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில், முறைகேடுகளை தவிர்க்க, பயனாளிகள் பட்டியலை சரிபார்க்க, பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளதாக கூட்டுறவுதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், நீண்ட இழுபறிக்குப்பிறகு, கடந்த ஒரு வாரமாக, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் என மூன்று வட்டாரங்களிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல், கூட்டுறவுத்துறையினர், குளறுபடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


ஆயிரக்கணக்கனோர் பாதிப்பு


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சீசனில், 50,087 விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றிருந்தும், 12,391 விவசாயிகள் மட்டுமே, தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கூட்டுறவு துறையினர் அறிவித்தனர்.இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட அமைச்சர் சாமிநாதனிடம் தொடர் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


latest tamil newsஅதில், அடங்கல் விதிமீறல் என காரணம் காட்டி, தகுதியானவர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல் விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. தற்போது, 46,903 விவசாயிகள் தள்ளுபடி பெற தகுதியானர்கள் என அறிவித்து, சான்றிதழ் வினியோகிக்கின்றனர். ஆனால், அடங்கல் கொடுத்து, கடன் பெற்ற, 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை என, தெரிவித்துள்ளனர். இதில், சிறு, குறு விவசாயிகளே அதிகளவு பாதித்துள்ளனர்.
பல முறை வலியுறுத்தியும், அடங்கல் பதிவில் குளறுபடி என்ற ஒரே காரணத்தை தெரிவித்து, தள்ளுபடியை மறுத்து வருகின்றனர். பல முறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், சார்பில், மனு கொடுக்கும் போராட்டம் இன்று, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

விவசாயிகள் தனித்தனியாக, மனுக்களை சமர்ப்பித்து, அரசுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டங்களில், ஈடுபடுவதை தவிர, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.இவ்வாறு, தெரிவித்தனர்.


புதுசுக்கும் இழுத்தடிப்பு


தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த குளறுபடி தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், பி.ஏ.பி., அமராவதி பாசன பகுதிகளில், சாகுபடி பணிகள் துவங்கிய போது, பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்த பலருக்கு இதுவரை, கடன் வழங்கப்படவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், மானாவாரி சாகுபடி விதைப்புக்காக, விண்ணப்பித்தவர்களுக்கும் இதுவரை பயிர்க்கடன் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
26-அக்-202117:00:04 IST Report Abuse
sankaseshan தகுதிஉள்ள விவசாயிகள் திராவிட குஞ்சுகளாக இருப்பார்கள் விடியல் ஆட்சியையும் வாக்குறுதிகளும் இப்படித்தான் நிறைவேறும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-அக்-202113:16:42 IST Report Abuse
RajanRajan அப்போ கடன் தள்ளுபடிய வச்சு கூட்டுறவு ஆட்டையையும் போட துவங்கிட்டன் ...உசார் உசார்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
26-அக்-202113:12:45 IST Report Abuse
raja உண்மை விவசாயிகளுக்கு நகை தள்ளுபடி செய்யாமல்... போலி உடன்பருப்பு விவசாயிகளுக்கு கொள்ளை அடிக்க தள்ளுபடி செய்த கேவலமான வெக்கம் கெட்ட விடியல் அரசு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X