பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் 142 அடி தேக்குவதில் சிக்கல்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (20+ 7)
Share
Advertisement
கூடலுார்: பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' நடைமுறையால் தற்போது 142 அடி உயர்த்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் ரூல் கர்வ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.152 அடி உயரம் கேரளாவில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. பெரியாறு அணையில் தொடர் மழையால் நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 137.20
பெரியாறு அணை, 142 அடி, சிக்கல், ரூல்கர்வ்,  நடைமுறை, ரத்து, விவசாயிகள், வலியுறுத்தல்,

கூடலுார்: பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' நடைமுறையால் தற்போது 142 அடி உயர்த்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் ரூல் கர்வ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.


152 அடி உயரம்

கேரளாவில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. பெரியாறு அணையில் தொடர் மழையால் நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 137.20 அடியாக உயர்ந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து 3360 கன அடியாகவும், நீர் திறப்பு 2200 கனஅடியாகவும் உள்ளது. அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி தேக்க வாய்ப்பு இருந்தும், ரூல் கர்வ் நடைமுறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்த ரூல் கர்வ் நடைமுறையை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.


அதென்ன ரூல் கர்வ்?


பருவமழை மற்றும் கோடை காலங்களில் அணையில் பராமரிக்கப்படவேண்டிய அல்லது நிலை நிறுத்தக்கூடிய நீரின் அளவு மற்றும் செயல்பாடுகளின் விதிகள்தான் 'ரூல் கர்வ்' எனப்படுகிறது.
பருவமழை காலங்களான ஜூன் முதல் அக்டோபர் வரை நீர்வரத்து அதிகமாக உள்ளபோது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைகாலங்களில் நீர் மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம். இதை நடைமுறைப்படுத்த மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி, காவிரி தொழில்நுட்ப குழு ஒப்புதல் போன்றவை வேண்டும்.

பெரியாறு அணையில் ரூல் கர்வ் நடைமுறைப் படுத்த கேரள அரசு மத்திய நீர்வள ஆணையத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ஜன.,19ல் மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் நித்தியானந்த ராய், இணை இயக்குனர் ஜெஸ்லி ஐசக் குழு அணைப்பகுதியில் ஆய்வுசெய்து நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதற்கு அப்போதைய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் மத்திய கண்காணிப்பு குழு கூட்டத்திலும் தமிழக பொதுப்பணித் துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


latest tamil newsமுற்றுகை போராட்டம்

இதனால், தற்போது 142 அடிக்கு நீரை தேக்குவதில் சிக்கல் உள்ளது. ' தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ள இந்த ரூல்கர்வ் நடைமுறையை உடனடியாக பெரியாறு அணையில் நீக்கவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பெரியாறு அணையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்' என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (20+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
26-அக்-202116:32:12 IST Report Abuse
Anand முல்லைப்பெரியாறு, காவேரி விஷயத்தில் தமிழக மக்களுக்கு கட்டுமரம் இழைத்த துரோகதிற்கு மாற்றாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விடா முயற்சியால் தமிழ்நாட்டிற்கு வெற்றியை தேடி தந்தார், இனி விடியல் அரசு அதை குழி தோண்டி புதைக்கும்......
Rate this:
raja - Cotonou,பெனின்
26-அக்-202116:51:08 IST Report Abuse
rajaகுடும்ப டிவி இருக்கே கேரளா நாட்டில ....பொழப்பு நல்ல போயிகிட்டு இருக்கிறப்ப.... தமிழனுக்காக தெலுங்கன் நான் ஏன் செய்யணும்...விடியலின் சிந்தனை.......
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
26-அக்-202113:45:01 IST Report Abuse
JeevaKiran 2014 ல் உச்சநீதிமன்றம், 152 அடிவரை படிப்படியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதே. வழங்கிய தீர்ப்பை நடைமுறை படுத்த நம் தமிழக அதிகாரிகள் ஏன் முயற்சி செய்யவில்லை? சம்திங் இடிக்குதே?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
26-அக்-202119:42:43 IST Report Abuse
தமிழ்வேள்தமிழக அரசில் பெரும்பான்மை மலையாளிகள் வேலை செய்வதால், கேரள் அரசுக்கு ஆதரவாக என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.......
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
26-அக்-202113:40:29 IST Report Abuse
JeevaKiran உண்மையிலேயே தமிழகத்தை ஆளும் எவனுக்கும் (அ. வியாதிகளிலிருந்து அதிகாரிவரைக்கும்) தமிழன் மீது உண்மையான அக்கறை இல்லை. ஒரு சிறிய உதாரணம். ஆந்திராவில் பாலாறு 27 கி.மீ தூரம்தான் பாய்கிறது. அதில் 29 தடுப்பணை அந்த அரசு கட்டியுள்ளது. அந்த அரசு அந்த மாநில மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. இங்கு 290 கி.மீ. தூரம் பாய்கிறது. ஒரு தடுப்பணை கூட இல்லை. மாநில மக்கள் மீதும் மாநில வளர்ச்சி மீதும் அக்கறை இருந்தால்தானே?
Rate this:
raja - Cotonou,பெனின்
26-அக்-202117:08:39 IST Report Abuse
rajaபாலாறுல தண்ணி ஓடுனா தடுப்பணை கட்டலாம்... அதன் மணலு எல்லாம் சொரண்டி சொத்துசேர்த்து விட்டார்களே விடியலின் உடன்பிறப்புக்கள்.......
Rate this:
26-அக்-202117:11:33 IST Report Abuse
Vittalanandஎன்னங்க 27 கிலோமீட்டரில் 29 தடுப்பணை கட்டப்பட்டுள்ளது எனில் தமிழ்நாட்டுக்கு என்ன மீதி நீர் தடுப்புPஅணை காட்ட மிச்சமிருக்கும் ? ஆந்திராவில் தான் பாலாருக்கு நீர் பிடிப்பு பகுதி உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X