பெரியாறு அணையில் 142 அடி தேக்குவதில் சிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் 142 அடி தேக்குவதில் சிக்கல்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (20)
Share
கூடலுார்: பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' நடைமுறையால் தற்போது 142 அடி உயர்த்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் ரூல் கர்வ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.152 அடி உயரம் கேரளாவில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. பெரியாறு அணையில் தொடர் மழையால் நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 137.20
பெரியாறு அணை, 142 அடி, சிக்கல், ரூல்கர்வ்,  நடைமுறை, ரத்து, விவசாயிகள், வலியுறுத்தல்,

கூடலுார்: பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' நடைமுறையால் தற்போது 142 அடி உயர்த்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் ரூல் கர்வ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.


152 அடி உயரம்

கேரளாவில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது. பெரியாறு அணையில் தொடர் மழையால் நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 137.20 அடியாக உயர்ந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து 3360 கன அடியாகவும், நீர் திறப்பு 2200 கனஅடியாகவும் உள்ளது. அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி தேக்க வாய்ப்பு இருந்தும், ரூல் கர்வ் நடைமுறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்த ரூல் கர்வ் நடைமுறையை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.


அதென்ன ரூல் கர்வ்?


பருவமழை மற்றும் கோடை காலங்களில் அணையில் பராமரிக்கப்படவேண்டிய அல்லது நிலை நிறுத்தக்கூடிய நீரின் அளவு மற்றும் செயல்பாடுகளின் விதிகள்தான் 'ரூல் கர்வ்' எனப்படுகிறது.
பருவமழை காலங்களான ஜூன் முதல் அக்டோபர் வரை நீர்வரத்து அதிகமாக உள்ளபோது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைகாலங்களில் நீர் மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம். இதை நடைமுறைப்படுத்த மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி, காவிரி தொழில்நுட்ப குழு ஒப்புதல் போன்றவை வேண்டும்.

பெரியாறு அணையில் ரூல் கர்வ் நடைமுறைப் படுத்த கேரள அரசு மத்திய நீர்வள ஆணையத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ஜன.,19ல் மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் நித்தியானந்த ராய், இணை இயக்குனர் ஜெஸ்லி ஐசக் குழு அணைப்பகுதியில் ஆய்வுசெய்து நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதற்கு அப்போதைய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் மத்திய கண்காணிப்பு குழு கூட்டத்திலும் தமிழக பொதுப்பணித் துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


latest tamil newsமுற்றுகை போராட்டம்

இதனால், தற்போது 142 அடிக்கு நீரை தேக்குவதில் சிக்கல் உள்ளது. ' தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ள இந்த ரூல்கர்வ் நடைமுறையை உடனடியாக பெரியாறு அணையில் நீக்கவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பெரியாறு அணையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்' என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X