ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் வித்தையை நல்ல விதமாக பின்பற்றுகிறது காவல் துறை என்கிறீர்களோ..

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு: தமிழக காவல் துறை, ஆளும், தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறி, தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அதிகமான கெடுபிடிகள் தருகிறது.தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படும் வித்தையை நல்ல விதமாக பின்பற்றுகிறது தமிழக காவல் துறை என்கிறீர்களோ.
ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் வித்தையை நல்ல விதமாக பின்பற்றுகிறது காவல் துறை என்கிறீர்களோ..

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு: தமிழக காவல் துறை, ஆளும், தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறி, தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அதிகமான கெடுபிடிகள் தருகிறது.


தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படும் வித்தையை நல்ல விதமாக பின்பற்றுகிறது தமிழக காவல் துறை என்கிறீர்களோ. அப்படியானால் கடந்த முறை, உங்களுக்கு ஆதரவாக இருந்திருக்குமே!



நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: வனங்களை பாதுகாக்க இதுவரை பின்பற்றப்படும் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், மத்திய அரசின் புதிய வரைவு வனச்சட்டம் அமைந்துள்ளது. காடுகளை அழிக்க வகை செய்யும் அந்த வரைவு உடனே வாபஸ் பெறப்பட வேண்டும்.


தமிழக கட்சிகளுக்கு எதைத் தான் கண்டிக்க வேண்டும் என்ற வரையறையே இல்லாமல் போயிற்று. பிற கட்சிகளை முந்தி, புதிய விஷயத்தை கண்டுபிடித்து கண்டித்து விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது!



தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தனக்குத்தானே பெருமைபட்டுக் கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால் ஒரு தடவை போட்டவர்கள் 51 சதவீதம். இரு தடவை போட்டவர்கள் 21 சதவீதம் மட்டும் தான். இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் இந்தியாவில் தான் மிக அதிகம்.


பிரதமர் எந்த இடத்திலும், 'என் தலைமையிலான அரசின் சாதனை இது' என கூறவே இல்லை. ஒட்டுமொத்த நாட்டின் சாதனை என்று தான் கூறி வருகிறார். எனவே, பிரதமரை சாடாதீர்கள்!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: சகுனியாக மாறி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சசிகலா நினைத்தால், அவருக்கு தோல்வி தான் கிடைக்கும். பதவியாசை பிடித்த ஒரு சிலர், அவர் பக்கம் போகலாம். அதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.


latest tamil news




தி.மு.க.,விடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளீர்கள்... கட்சியை கைப்பற்ற சசிகலா முயற்சிக்கிறார்... அவருக்கு பின்னாலும், கொஞ்சம் கூட்டம் உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு இன்னும் என்ன பாதிப்பு ஏற்படவில்லை என்கிறீர்கள்?



தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை
: நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்க வேண்டும். இதற்காக, அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், தனிக்கொடியை உருவாக்குவதற்கான பணிகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்லி இருந்தால் செய்திருப்பார். இப்போது முதல்வரான பிறகு கஷ்டம் தான்!


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-அக்-202118:27:51 IST Report Abuse
D.Ambujavalli காவல் துறை மட்டுமா ? எல்லாமும்தான் ஆளும் கட்சிக்காக ஆடுகின்றன இது வித்தையல்ல, வாழும் வகை, அல்லது வயிற்றுப்பிழைப்பு உங்கள் ‘ராஜ்ஜியம்’ நடந்தபோது அவர்கள் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் விட்டு வைத்துருப்பீர்களா ? இப்போதுதான் மக்களுக்காக உருகுகிறீர்களோ ?
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
26-அக்-202118:18:03 IST Report Abuse
Rpalnivelu கட்டு கட்சியும் டெண்டர் கட்சியும் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சி போகுறார்கள் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது வெட்ட வெளிச்சமாகியரது பீசேபி ஒன்னுதான் இருப்பதில் யோகியமான கட்சியாக கண்ணுக்கு தெரிகிறது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
26-அக்-202116:17:41 IST Report Abuse
vbs manian நூறு கோடி ஊசி விஷயத்தில் மோடியை எதிர்த்து பொறாமையால் வெந்து எதிர்க்கட்சிகள் வெடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X