பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,1 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி இயக்கம்: தெற்கு ரயில்வே

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 1ம் தேதி முதல் 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து
தமிழகம், தெற்கு ரயில்வே, நவம்பர் 1 முதல், எக்ஸ்பிரஸ் ரயில்கள், முன்பதிவில்லா பெட்டி இயக்கம், மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 1ம் தேதி முதல் 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் தெற்கு ரயில்வே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளுடன் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பஸ்களும் 100 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், நவம்பர் முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வழக்கமான ரயில்கள் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


ராமேசுவரம் - திருச்சி, திருச்சி - ராமேசுவரம், எம்.ஜி.ஆர். சென்டிரல் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- எம்.ஜி.ஆர். சென்டிரல், பாலக்காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, நாகர்கோவில் - கோட்டயம், கோட்டயம் - நிலாம்பூர் சாலை, நிலாம்பூர் சாலை - கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - சோரணூர், சோரணூர்-திருவனந்தபுரம், கண்ணூர்-ஆலப்புழா, ஆலப்புழா-கண்ணூர், திருவனந்தபுரம் - திருச்சி, திருச்சி-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-கண்ணூர், கண்ணூர்-எர்ணாகுளம், கண்ணூர்-கோவை, கோவை-கண்ணூர், திருவனந்தபுரம்-குருவாயூர், குருவாயூர்-திருவனந்தபுரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.

மங்களூரு-கோவை, கோவை-மங்களூரு, நாகர்கோவில்-கோவை, கோவை-நாகர்கோவில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 10ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் முதல் இரண்டு பகல்நேர ரயில்கள் மட்டுமே தமிழகத்திற்கானவை இரண்டாவது அலுவலக வேலைக்கு சென்னை வந்து செல்வோர்க்கானது மற்றவையெல்லாம் கேரளத்துக்கானவை
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
26-அக்-202117:06:55 IST Report Abuse
mupaco ஒரு மணி நேர , இரண்டு மணி நேர ரயில்களை நீட்டித்து இயக்கலாம். விடுபட்ட பழைய ரயில்கள்...தொடரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X