அமெரிக்கா செல்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு: வெளிநாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: கோவிட் பரவல் காலத்தில் போடப்பட்ட பயண கட்டுப்பாடுகளை நீக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான சான்றிதழை காட்ட வேண்டும்.கோவிட் பரவ துவங்கிய நேரத்தில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்திருந்தது.கடந்த
US, Travel Curbs, India,  Children,Vaccine Rule, அமெரிக்கா, பைடன், சான்றிதழ்,

வாஷிங்டன்: கோவிட் பரவல் காலத்தில் போடப்பட்ட பயண கட்டுப்பாடுகளை நீக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான சான்றிதழை காட்ட வேண்டும்.

கோவிட் பரவ துவங்கிய நேரத்தில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்திருந்தது.

கடந்த செப்., 20ம் தேதி முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நவ., முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதன்படி, இந்த பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள பைடன் நிர்வாகம், தடுப்பூசி சார்ந்து வான்வெளி போக்குவரத்து கொள்கையை வகுத்து, பாதுகாப்பான முறையில், அமெரிக்காவுக்கு சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதற்காக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் அதிபர் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், சில மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 50 நாடுகளில் இருந்து, சுற்றுலா அல்லாத பயணமாக வருபவர்கள், அவர்களின் நாட்டில் தேசிய அளவில் 10 சதவீதம் பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்களுக்கும் தடுப்பூசியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 60 நாட்களுக்கு மேல் அவர்கள் தங்கியிருந்தால், தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்வது கட்டாயம்.


latest tamil news



அமெரிக்கா வரும் விமானங்களில், பயணம் செய்வதற்கு முன்னர் பயணிகள் தடுப்பூசி போட்டிருப்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அமெரிக்காவின் புதிய பயண கொள்கை மற்றும் தடுப்பூசி கொள்கை குறித்து பயணிகள் தெரிந்திருப்பதையும் விமான நிறுவனங்கள் உறுதி செய்வது அவசியம்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள், தடுப்பூசி போட்டிருப்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை காட்ட வேண்டும். பயணம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடைசி டோஸ் போடப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.

சர்வதேச பயணிகள், கிளம்புவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழையும், தடுப்பூசி போட்டு கொள்ளாத அமெரிக்கர்கள் மற்றும் தடுப்பூசியில் இருந்து விலக்கு கேட்கும் வெளிநாட்டு பயணிகள், கிளம்புவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும்.இந்த புதிய நடைமுறைகள் வரும் நவ.,8 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-அக்-202121:59:16 IST Report Abuse
Dhurvesh இனிமேல் எங்கு போவது , இப்போ எல்லா ஊர்களிலும் winter பனி தான் , அடுத்த மார்ச் தான் அப்போ தான் போய்வந்தாலும் 6 மாதம் SEP / OCT திரும்பி வர வசதியா இருக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-அக்-202114:03:03 IST Report Abuse
Ramesh Sargam பயணம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடைசி டோஸ் போடப்பட்டிருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். - அப்படி என்றால் பயணிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்ய வேண்டுமா?
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
26-அக்-202116:25:02 IST Report Abuse
வால்டர்: கடைசி டோஸ் குறைந்தது பயண தேதியிலிருந்து 15 நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் பயணம் செய்வது என்பது முடியாது. தயவு செஞ்சி அமெரிக்கா பக்கம் போய்டாதீங்க மானத்த வாங்குறதுக்கு....
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-அக்-202112:43:44 IST Report Abuse
 Muruga Vel maanavargal padikka
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X