பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதை காஷ்மீரில் கொண்டாடிய மாணவர்கள்; போலீஸ் வழக்குப்பதிவு

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா தோற்றதை காஷ்மீரில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர். இதையடுத்து மாணவர்கள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.துபாயில் அக்.,24ல் நடந்த ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடனான லீக் போட்டியில் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில்
Kashmir, Students, Celebrated, India Loss, Pakistan, Booked, UAPA, Barred, Govt Jobs, காஷ்மீர், மாணவர்கள், இந்தியா, பாகிஸ்தான், தோல்வி, கொண்டாட்டம், வழக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா தோற்றதை காஷ்மீரில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர். இதையடுத்து மாணவர்கள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துபாயில் அக்.,24ல் நடந்த ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடனான லீக் போட்டியில் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்துள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், இந்திய, பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் இந்திய அணியின் தோல்வியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.


latest tamil news


மருத்துவக்கல்லூரி விடுதியில் திரண்டிருந்த மாணவ, மாணவிகள் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை படுஜோராக கொண்டாடிய வீடியோவை இந்திய ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சவுராவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டாசு வெடித்தும், பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடியும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் சிலர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன்மூலம், குற்றம்சாட்டப்படும் மாணவர்கள் அரசு பணிகளில் சேர்வதற்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
26-அக்-202123:10:27 IST Report Abuse
Aarkay இந்த உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் கயவர்களுக்கு article 370 மூலம் சிறப்பு சலுகைகள். அங்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
26-அக்-202122:27:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்துத்வா தோற்றதாக பொருளா ?
Rate this:
Cancel
26-அக்-202122:15:31 IST Report Abuse
அப்புசாமி பெத்த ஆயி , அப்பனையே மதத்திற்கு அடுத்ததாக வெக்குறதுதானே மூர்க்கம். தாய்நாடு, தேசப்பற்று இதெல்லாம் கூட வாணாம். வென்றவன் மூர்க்ஜன் என்ற ஒரே காரணத்துக்காக கொண்டாடுறவனுங்களை வேறு எந்த சுதந்திர நாட்டிலும் அனுமதிக்கக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X