டில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ; 4 பேர் பலி| Dinamalar

டில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ; 4 பேர் பலி

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (2)
Share
டில்லி: டில்லி தலைநகரில் 3 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.டில்லி தலைநகர் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள
டில்லி, அடுக்குமாடி, கட்டடம், தீவிபத்து, 4 பேர் கருகி பலி,

டில்லி: டில்லி தலைநகரில் 3 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


டில்லி தலைநகர் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் சிக்கிக்கொண்டனர். இந்த தீவிபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



இதனை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டில் பரவிய தீயை கடுமையாக போராடி அணைத்தனர். ஆனால், தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் வீட்டின் 3வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். முதல் தளம் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X