9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021
Share
சென்னை: ‛‛மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகஇன்று (அக்.,26ம் தேதி): திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, தென்காசி,
தமிழகம், 9 மாவட்டங்கள், கனமழை, சென்னை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:


latest tamil news



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக


இன்று (அக்.,26ம் தேதி): திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், இதர தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 27 ம் தேதி: நீலகிரி, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:



latest tamil news


ஸ்ரீவைகுண்டம் (துாத்துக்குடி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 11 செ.மீ., ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி), அவினாசி (திருப்பூர்) தலா 8 செ.மீ., குடுமியான்மலை (புதுக்கோட்டை), வீரபாண்டி (தேனி), பவானிசாகர் (ஈரோடு) தலா 7 செ.மீ., பந்தநல்லுார் (நீலகிரி), சாத்தான்குளம் (துாத்துக்குடி) தலா 6 செ.மீ., திருமயம் (புதுக்கோட்டை), திருச்சி டவுன் தலா 5 செ.மீ., காரியாபட்டி (விருதுநகர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), சமயபுரம் (திருச்சி) கன்னிமார் (கன்னியாகுமரி), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 4 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:


தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதன்காரணமாக


latest tamil news


வரும் 27 மற்றும் 28ம் தேதி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 29 மற்றும் 31ம் தேதி: மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 30 மற்றும் 31ம் தேதி: தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X