சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; பழனிசாமி உதவியாளர் மீது வழக்குப்பதிவு

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய
எடப்பாடி_பழனிசாமி, உதவியாளர், மோசடி, மணி, வழக்குப்பதிவு

சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார். பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.


வேலை வாங்கி தருவதாக மோசடி எடப்பாடி பிஏ மீது வழக்கு

latest tamil news




இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை தமிழ்ச்செல்வன், புரோக்கர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26ம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணி மீது 120-பி, 420 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
26-அக்-202118:51:38 IST Report Abuse
Anantharaman Srinivasan லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்பது வெறும் ஏட்டளவில் தான். பல கோடிகளை தேர்தலில் செலவிட்டு ஜெயித்து வருவதே இதுபோல் பலவழிகளில் ஐந்தாண்டுகளில் சம்பாதிக்க தான். கோர்ட்களில் முழுசுதந்திரத்துடன் செயல்பட்டால் ஒரளவு கட்டுப்படும். அங்கேயும் கறுப்பாடுகள் உள்ளன. மத்தியரசும் நீதிமன்றங்களை மறைமுகமாக கட்டுப்படுத்துகின்றன.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-அக்-202117:33:57 IST Report Abuse
வெகுளி அடடே... நம்ம அணிலுக்கு நிகரான திறமைசாலியா தெரியுதே... விடியலுக்குள் வளைச்சு போடுங்கப்பா....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
26-அக்-202116:48:04 IST Report Abuse
DVRR ஸ்டாலின் வந்ததிலிருந்து போலீசுக்கு நெறைய வேலை அதிமுக ஆட்களை எப்படியாவது சிக்க வைக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X