ஒற்றுமை மிக முக்கியம்: கட்சியினருக்கு சோனியா அறிவுரை

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ''இந்த நேரத்தில், கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்து விரும்புகிறேன்,'' என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.உத்தரகண்ட், உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்தும், வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர்
சோனியா, சோனியாகாந்தி, காங்கிரஸ், sonia, soniagandhi, congress, cong, congresschief,

புதுடில்லி: ''இந்த நேரத்தில், கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்து விரும்புகிறேன்,'' என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட், உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்தும், வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மன்மோகன்சிங், எம்.பி., ராகுல், பிரியங்கா,மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச்செயலர்கள் கலந்து கொண்டனர்.


latest tamil news



இந்த கூட்டத்தில் துவக்கத்தில் பேசிய சோனியா பேசியதாவது:நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் காங்கிரசின் கொள்கையை பாதுகாப்பதற்கான போராட்டம் பொய் பிரசாரங்களை அடையாளம் கண்டு, அவற்றிற்கு முழு அளவில் பதிலடி கொடுக்க துவங்குகிறது. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொய் பிரசாரங்களுக்கு எதிராக கொள்கை ரீதியாக போராட வேண்டும். இந்த போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்களின் பொய் பிரசாரத்தை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

நாடு சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் மேலிடம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், மாவட்டம் மற்றும் தொகுதி ரீதியாக அவை சென்றடைவதில்லை என்பது எனது அனுபவம் ரீதியாக தெரியவந்துள்ளது. கொள்கை ரீதியாக சிக்கல்களும் உள்ளன. அதில், நமது மாநில அளவிலான தலைவர்கள் இடையே கூட தெளிவு மற்றும் ஒற்றுமை இல்லாததை புரிந்து கொள்கிறேன்.


latest tamil news


கடைசியாக, கட்டுப்பாடும், ஒற்றுமையும் தான் இந்த நேரத்தில் மிக முக்கியம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். கட்சியை பலப்படுத்துவதை நாம் முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம், தனிப்பட்ட லட்சியங்களை மீறினால் மட்டுமே நடக்கும். இதன் அடிப்படையில் தான் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றி கிடைக்கும். இவ்வாறு சோனியா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-202119:58:06 IST Report Abuse
ravi chandran எதற்காக கொள்ளை அடிக்கவா?
Rate this:
Cancel
26-அக்-202119:13:55 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு ஒரு ஆள் போதும்... கான் கிராஸ் கட்சியை காணமல் செய்வதற்க்கு... சமீபத்திய உதாரணம்.. பஞ்சாப்... சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சி விட்டு.. இப்போ குத்துதே குடையுதே என்றால் எப்படி???
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-அக்-202119:00:15 IST Report Abuse
Vena Suna எப்போ சுனாமி வந்ததோ அப்பலேந்தே காங்கிரஸ் அழிந்தது.மோடி என்ற சுனாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X