லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 23 பேர் தான் சாட்சிகளா?: உச்சநீதிமன்றம் கேள்வி

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 23 பேர் நேரடி சாட்சிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய உ.பி., அரசுக்கு, ‛100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில் வெறும் 23 பேர்தான் சாட்சிகளா?' என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் விவசாயிகளின் பேரணியின் போது கார் மோதியதால் வன்முறை வெடித்தது. இதில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர்
Lakhimpur Kheri, Hundreds of Farmers, Only 23 Witnesses, SC, Asks, UP Govt, லக்கிம்பூர், வன்முறை, சாட்சிகள், உச்சநீதிமன்றம், உத்தரபிரதேசம், உபி

புதுடில்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் 23 பேர் நேரடி சாட்சிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய உ.பி., அரசுக்கு, ‛100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில் வெறும் 23 பேர்தான் சாட்சிகளா?' என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் விவசாயிகளின் பேரணியின் போது கார் மோதியதால் வன்முறை வெடித்தது. இதில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேரை உ.பி., போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. இன்று (அக்.,26) நடைபெற்ற விசாரணையில், உ.பி., மாநில அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.


latest tamil news


அப்போது அவர், ‛‛விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததாக 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 23 பேர் நேரடி சாட்சிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில் கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். ஆனால், வெறும் 23 பேர்தான் சாட்சிகளா?' என கேள்வி எழுப்பினர். அத்துடன் நேரில் பார்த்த சாட்சிகளுக்கு உ.பி. அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உ.பி. அரசுக்கு உத்தரவிட்டு நவம்பர் 8ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
26-அக்-202123:42:20 IST Report Abuse
Aarkay முதலில், போலி விவசாயிகளையும் குண்டர் கூட்டத்தையும் கைது செய்யுங்கள். 144 தடை உத்தரவு போட்டு, கூட்டம் கூடுவதை தவிர்க்கவும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இந்த குண்டர்களை ஆதரிப்போரை தேர்தல் நேரத்தில் உரியமுறையில் நிராகரிப்போம்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
26-அக்-202123:18:14 IST Report Abuse
Aarkay நீதித்துறையில் எக்கச்சக்கமாய் உண்டிக்குலுக்கிகளின் இடதுசாரி ஆட்களும், போலி செக்யூலரிஸ கோஷ்டிகளும் பரவி இருக்கின்றனர். Opposition sponsored ஒரு குண்டர் கூட்டம் விவசாயிகள் என்ற போர்வையில், மாதக்கணக்காக விவசாயத்தைவிட்டு, வாகனங்கள் செல்லும் சாலையை மறித்தும், வாகனங்களை தாக்கியும், பொதுமக்களுக்கு இடைஞ்சல் தந்து, சட்டத்தை மதிக்காமல், தங்கள் கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு அராஜகம் செய்து வருவார்கள். அவர்களுக்கு சப்போர்ட் வேறு
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202123:06:22 IST Report Abuse
 rajan நீதிபதிகள் என்ன கேட்கிறார்கள் என்று புரியவில்லை அவர்கள் எது சொன்னாலும் அதுதான் சரியான கூற்று என்று அவர்கள் நினைக்கக்கூடாது. ஆயிரம் பெயர்கள் இருந்தாலும் அத்தனை பேரும் எப்படி விபத்தை பார்க்க முடியும் அருகில் இருப்பவர்கள் மட்டும்தானே பார்த்திருப்பார்கள். இருபத்தி மூன்று பேர் சாட்சிகள் போதாதா, இவர்கள் கேள்வி கேட்பதைப் பார்த்தால் எதிர்க்கட்சி நீதிபதிகள் மாதிரி உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X