கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஊழல்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Added : அக் 26, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
மதுரை: ‛‛நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை,'' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‛அரசு பணியில் சேர்வது முதல் இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வுபெறும் வரை ஊழல் மற்றும் லஞ்சம்
Corruption, Indian Economy, Growth, Madurai, HC, ஊழல், பொருளாதாரம், வளர்ச்சி, சீர்குலைப்பு, மதுரை, உயர்நீதிமன்றம், மதுரை கிளை

மதுரை: ‛‛நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை,'' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‛அரசு பணியில் சேர்வது முதல் இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வுபெறும் வரை ஊழல் மற்றும் லஞ்சம் பெருமளவில் காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கும்போது தங்களது மூத்த அதிகாரிகளிடம் உரிய தகவலை வழங்க வேண்டும். வீடு கட்டுவது, விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு கூட உயர் அதிகாரிகளிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‛ஊழல் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரம் ஆழமானது. சாதாரண மனிதர்களும் எளிமையானது என்பதால் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர். இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்,' எனக்கூறி, வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
27-அக்-202107:12:41 IST Report Abuse
 N.Purushothaman மொதல்ல நீதித்துறையில இருக்குற அவலங்களை சரி செய்ங்க ...உங்களுக்கே வேணும்ன்னா தானா முன்வந்து விசாரிப்பாங்க ...உங்களுக்கு வேண்டமாம்ன்னா அநீதி நடத்தலாம் அப்படியே கண்டுக்கிடாம போயிடுவீங்க .....ஏ கே ராஜன் போன்ற ஒரு சித்தாந்தத்தின் கீழ் இருக்கிற நீதிபதிகள் அவர்களின் பதவிக்காலத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
26-அக்-202122:42:55 IST Report Abuse
John Miller அதனால்தான் கிராண்ட் வழக்கில் சகாயம் அவர்கள் கொடுத்த அறிக்கையை படித்து ஒரு மாதத்தில் தீர்ப்பு கொடுத்து ஊழலை ஒலித்தவர்கள் அல்லவே நீங்கள்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
26-அக்-202122:26:23 IST Report Abuse
Duruvesan ராஜ பெனின் மூர்கன் ஹிந்து பெயரில் அவனுக்கு போயி 😂 அவனுக்கு மூளை அங்க 😜 இருக்கு, ஆமென்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X