சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை பிற பிரிவு மாணவர்கள் மூலம் நிரப்பி கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதனை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்பலாம். ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினரை கொண்டு சுழற்சி முறையில் நிரப்பி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென் மாவட்டங்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கீழ் வரும் இடங்கள் பெரும்பாலானவை, காலியாக இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள், சீர் மரபினரை கொண்டு அதனை நிரப்புவதற்கும், அதேபோல், இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருப்பின், அதனை வன்னியர்களை கொண்டு நிரப்பிட ஏதுவாகவும், இந்த உத்தரவுஅரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE