புதுடில்லி: மத்திய அரசின், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புதிய இல்லங்கள் கட்டப்படவுள்ள மனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் தற்போது உள்ள பார்லிமென்ட் கட்டடத்தின் அருகிலேயே அதிக இடவசதியுடன் கூடிய நவீன பார்லி., வளாகம், துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான புதிய இல்லங்கள், புதிய தலைமை செயலகம் ஆகியவை கட்டும், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதில், துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான இல்லங்கள் கட்ட முன்பு திட்டமிடப்பட்டு இருந்த மனையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,இந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மனமகிழ் மன்றம் தற்போது செயல்பட்டு வருகிறது.
எனவே இந்த மாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மனமகிழ் மன்றத்துக்கு வேறு இடம் ஒதுக்கப்படுமா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், ''பார்லி., வளாகத்துக்கு அருகிலேயே மக்கள் பயன்படுத்தும் மனமகிழ் மன்றத்தை அமைப்பது பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தும்,'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement