சாட்சிகளை கலைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு; நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த ஆர்யன் கான்| Dinamalar

சாட்சிகளை கலைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு; நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த ஆர்யன் கான்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (10)
Share
மும்பை: பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (23) முன்னதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகளிடம் அவர் கூறுகையில், ‛தனக்கும் என்.சி.பி. அதிகாரிகளின் சாட்சிகளை கலைக்க பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த
Aryan Khan, Nothing To Do, Payoff Charge, Witness, Court, Reply, ஆர்யன் கான், சாட்சிகள், கலைப்பு, லஞ்சம், குற்றச்சாட்டு, நீதிமன்றம், பதில், மறுப்பு

மும்பை: பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (23) முன்னதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகளிடம் அவர் கூறுகையில், ‛தனக்கும் என்.சி.பி. அதிகாரிகளின் சாட்சிகளை கலைக்க பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை,' என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு மும்பையில் இருந்து கோவா நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் நடந்த மது விருந்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முன்னதாக கலந்து கொண்டார். நள்ளிரவில் திடீரென என்.சி.பி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் உட்பட 8 பேர் கைதாகினர். தற்போது என்.சி.பி. அதிகாரிகள் பாலிவுட் வட்டாரத்தில் ஆர்யன் உடன் தொடர்புடைய அனன்யா பாண்டே உள்ளிட்ட பலரை விசாரணை செய்து வருகின்றனர்.


latest tamil news


முன்னதாக ஜாமின் வழங்கக்கோரி ஆர்யன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமினுக்கு முயற்சி மேற்கொண்டுவருகிறார். முன்னதாக ஆர்யன் கானுடன் தனியார் புலன் ஆய்வாளரான கோசாவி எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. கோசாவியைப் பயன்படுத்தி இந்த வழக்கிலிருந்து தப்பிக்க ஆரியன் கான் என்.சி.பி அதிகாரி வாங்கடேவுக்கு 25 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி மேற்கொண்டதாக என்.சி.பி தரப்பு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டி இருந்தது.


latest tamil news


இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது ஆர்யன் பதிலளித்துள்ளார். தனக்கும் கோசாவிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தான் பணம் கொடுத்து சாட்சிகளை கலைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஜாமின் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் மூலம் வாதிட்டு வருகிறார். இவ்வாறாக இந்த வழக்கு நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், இடைத்தரகர்கள் ஆகியோரை பிடிக்க என்.சி.பி. அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X