பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுப்புழு வளர்க்க மானியம்: பயன்படுத்த அழைப்பு

Added : அக் 26, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளுக்காக, பட்டு வளர்ச்சித்துறையில் மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகா பகுதிகளில், பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து உள்ளனர். தென்னைந்தோப்பில், ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது. சிலர், கொட்டகை அமைத்து பட்டுப்புழு

ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளுக்காக, பட்டு வளர்ச்சித்துறையில் மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகா பகுதிகளில், பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து உள்ளனர். தென்னைந்தோப்பில், ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது. சிலர், கொட்டகை அமைத்து பட்டுப்புழு வளர்க்கின்றனர்.இந்நிலையில், அரசு மானியத்தில் மல்பெரி சாகுபடி செய்யவும், பட்டுப்புழுக்கள் வளர்க்கவும், பட்டு வளர்ச்சித்துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சோபனா கூறியதாவது:தோப்பில் சிறிது இடத்தில் கொட்டகை அமைத்தும், மல்பெரி சாகுபடி செய்தும் பட்டுப்புழு வளர்க்கலாம். பட்டுப்புழு வளர்ப்பு வாயிலாக விவசாயிகள், அதிக அளவில் வருமானம் ஈட்ட முடியும்.பட்டு வளர்ச்சியை அதிகரிக்க, தற்போது மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டுப்புழுக்களின் முக்கிய உணவான மல்பெரி சாகுபடிக்கு, நாற்றுகள் நடவு செய்ய ஏக்கருக்கு, 10,500 ரூபாய் நடவு மானியமாக வழங்கப்படுகிறது.சிறு, குறு விவசாயிகளுக்கு, நுாறு சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்தில், சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது.அதேபோல், கொட்டகை அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. ஆயிரம் சதுர அடிக்கு மேல் கொட்டகை அமைக்க, 1.20 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.மேலும், 52,500 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புழு வளர்ப்புக்கு பயன்படும் வலைகள், மல்பெரியில் களைகள் அகற்றும் கருவி, அறுவடைக்கு பிறகு பட்டுப்புழு கொட்டகை சுத்தம் செய்யும் மின் மோட்டார் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படும்.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகா விவசாயிகள் அந்தந்த வேளாண் அலுவலகத்திலோ அல்லது பொள்ளாச்சியில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து, அரசு மானிய திட்டத்தில் பயனடையலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X