பைனான்சியர்கள் வசம் ஏ.டி.எம்., கார்டு: மீட்க முடியாமல் திணறும் தொழிலாளர்கள்

Added : அக் 26, 2021
Advertisement
வால்பாறை: வால்பாறை தோட்ட தொழிலாளர்கள், வங்கி ஏ.டி.எம்., கார்டுகளை பைனான்சியர்களிடம் அடகு வைத்து, மீட்க முடியாமல் திணறுகின்றனர்.வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, தற்போது தினக்கூலியாக, 347.46 ரூபாய் வழங்கப்படுகிறது.குறைவான சம்பளம் வழங்கப்படுவதால், எஸ்டேட் தொழிலாளர்கள் வட்டிக்கு பணம்

வால்பாறை: வால்பாறை தோட்ட தொழிலாளர்கள், வங்கி ஏ.டி.எம்., கார்டுகளை பைனான்சியர்களிடம் அடகு வைத்து, மீட்க முடியாமல் திணறுகின்றனர்.வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, தற்போது தினக்கூலியாக, 347.46 ரூபாய் வழங்கப்படுகிறது.குறைவான சம்பளம் வழங்கப்படுவதால், எஸ்டேட் தொழிலாளர்கள் வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டதால், பைனான்சியர்கள் நேரடியாக சென்று வசூல் செய்தனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக, தொழிலாளர்களுக்கு அவர்களது சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை வசூலிக்க மாற்று வழியை கையாள்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், தற்போது, தொழிலாளர்களிடம் அவர்களது ஏ.டி.எம்., கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு வழங்குகின்றனர்.
மாதம் தோறும் தொழிலாளர்களுக்கு வங்கியில் பணம் வரவு செய்யப்பட்டதும், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:குறைந்த சம்பளத்தால் குடும்பத்தை நடத்த முடியாமல், வேறு வழியின்றி வட்டிக்கு கடன் வாங்குகிறோம். ஆனால், அவர்கள் இதை சாதகமாக பயன்படுத்தி எங்களது ஏ.டி.எம்., கார்டை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுக்கின்றனர்.தற்போது, தீபாவளி போனஸ் கூட எவ்வளவு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. தொழிலாளர்களின் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வால்பாறை கூட்டுறவு நகர வங்கியில், குறைந்த வட்டியில் தொழிலாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X