பொது செய்தி

தமிழ்நாடு

இடியும் நிலையில் ரேஷன் கடை: அச்சத்தின் பிடியில் மக்கள்

Added : அக் 26, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம், இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில், பஸ் ஸ்டாப் அருகே கடந்த, 2002ல் ரேஷன் கடை கட்டடம் திறக்கப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. ஐ.பி.109 என்ற எண்ணுள்ள இந்த கடையின் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. முன்புறம்
 இடியும் நிலையில் ரேஷன் கடை: அச்சத்தின் பிடியில் மக்கள்



மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம், இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில், பஸ் ஸ்டாப் அருகே கடந்த, 2002ல் ரேஷன் கடை கட்டடம் திறக்கப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. ஐ.பி.109 என்ற எண்ணுள்ள இந்த கடையின் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. முன்புறம் மேற்கூரையை தாங்கி நிற்கும் துாணின் அடிப்பாகம் முழுவதும் சிதிலமடைந்து விட்டது.தரைத்தளம் முழுவதும் கான்கிரீட் உடைந்துவிட்டது. சுற்றுச்சுவரில் பல இட ங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன.இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: ரேஷன் பொருட்கள் வாங்க, குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறோம். சில நேரம் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களும் இந்த கட்டடத்திற்குள் வந்து திரும்புகின்றனர். பலஆண்டுகள் பயன்பாடு காரணமாக, மிகவும் சேதமடைந்துள்ள இந்த கட்டடத்தால் ரேஷன் பொருட்கள் வாங்கச்செல்லவே அச்சமாக உள்ளது.இதனால், இந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அரசு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X