பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு போன் போதுமே

Added : அக் 26, 2021
Share
Advertisement
சுகாதார சீர்கேடுஉடுமலை ராமசாமி நகரில் இருந்து அரசு கலைக்கல்லுாரிக்கு செல்லும் ரோட்டில், திறந்தவெளியில், குப்பைகளை குவித்து தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என். சதிஷ்குமார், உடுமலை.மெகா குழியால் விபத்துஉடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில், பழநி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் திரும்பும் இடத்தில்,


சுகாதார சீர்கேடு


உடுமலை ராமசாமி நகரில் இருந்து அரசு கலைக்கல்லுாரிக்கு செல்லும் ரோட்டில், திறந்தவெளியில், குப்பைகளை குவித்து தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என். சதிஷ்குமார், உடுமலை.


மெகா குழியால் விபத்து

உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில், பழநி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் திரும்பும் இடத்தில், ரோட்டிலுள்ள மெகா குழியால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இந்த குழியை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். மகேந்திரன், உடுமலை.


இருக்கைகள் சேதம்

உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரையில், இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். இதை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.ஏ.சுகந்தி, உடுமலை.


ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

மடத்துக்குளம் அருகே, கணியூரில் பஸ் ஸ்டாப் தொடங்கி புதுார் மடம் வரை, ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.க .அழகேசன், கணியூர்.நிழற்கூரை வேண்டும்மடத்துக்குளம் தாலுகா நரசிங்காபுரம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. இதனால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். அங்கு நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மு. கன்னிமுத்து, நரசிங்காபுரம்.ஒளிராத தெருவிளக்குகள்பொள்ளாச்சி - உடுமலை ரோடு, கெடிமேடு வாய்க்கால் அருகே, தெருவிளக்கு எரியாததால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பு கருதி, அங்கு தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.ஜி.-கணேஷ், கெடிமேடு.மின்கம்பத்தில் படரும் கொடிபொள்ளாச்சி, வடசித்துார் -- நெகமம் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியிலுள்ள, மின் கம்பங்களில் கொடி படர்ந்துள்ளது. கம்பம் முழுவதும் கொடி படர்வதற்குள், அவற்றை அகற்றி மின்கம்பங்களை பராமரிக்க வேண்டும்.-எம். பெருமாள், வடசித்துார்.அடிப்படை வசதியில்லைவால்பாறை நகர் பழைய பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்படுத்த வேண்டும். இதனால், காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.-கி.தாரணி, வால்பாறை.


காட்சிப்பொருளான கழிப்பிடங்கள்

ஆனைமலை அடுத்த, அங்கலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள, 80 சதவீதம் பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது. காட்சிப்பொருளாக உள்ள கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.எஸ். சுதர்ஷன், அங்கலக்குறிச்சி.இடித்த நிழற்கூரையை கட்டுங்க!பொள்ளாச்சி, வடக்கு ஒன்றியம் தேவம்பாடி காளிபாளையத்தில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூரை திரும்ப கட்டப்படாமல் இருப்பதால், மக்கள் மழைக்காலத்தில் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.வே.நாகரத்தினம், காளிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X