பொது செய்தி

இந்தியா

லட்சம் பெரிதல்ல லட்சியமே பெரிது :மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
உஜ்ஜைனி: தன் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ரூ.17 லட்சம் அவரது நகைகளை கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார் பாசமிக்க கணவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரது மனைவி ரஷ்மி பிரபா. இவர்கள் ம.பி., மாநிலம் உஜ்ஜைனியில் வசித்து வந்தனர். உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் நாடு முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க

உஜ்ஜைனி: தன் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ரூ.17 லட்சம் அவரது நகைகளை கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார் பாசமிக்க கணவர்



latest tamil news



ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரது மனைவி ரஷ்மி பிரபா. இவர்கள் ம.பி., மாநிலம் உஜ்ஜைனியில் வசித்து வந்தனர். உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் நாடு முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும்.

இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவது லஷ்மிபிரபாவின் வழக்கம் இதன் மூலம் அந்த கோவிலில் அனைவருக்கம் பரிச்சயமானார். தனக்கு சொந்தமான நகைகளை கோவிலுக்கு தானமாக வழங்க உள்ளதாக கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக லஷ்மிபிரபா காலமானார்.

இதனையடுத்து அவரது கணவர் சஞ்சீவ் குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கோவில் அதிகாரிகளை சந்தித்து தனது மனைவியின் ஆசைகளில் ஒன்றான அவரது நகைகளை கோவிலுக்கு தானமாக அளிக்க முன்வருவதாக தெரிவித்தார். இதன்படி நெக்லஸ், வளையல்கள் மற்றும் கம்மல்கள் என மொத்தம் 310 கிராம் நகைகள் தானமாக வழங்கினர்.இவற்றின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 17 லட்சம் மாகும்.

இதன்மூலம் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர் சஞ்சீவ்குமார் லட்சங்களை விட மனைவியின் லட்சியமே பெரிது என்பதை நிரூபித்துத்துள்ளார்.


latest tamil news



முன்னதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாவது: கோவிட் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்தது.ஜூன் 28 ம் தேதி முதல் அக்.,15 ம் தேதி வரையிலான மூன்றரை மாதங்களில் நுழைவுச்சீட்டு,லட்டுகள் விற்பனை மூலம் ரூ.23.03 கோடி கிடைத்துள்ளது என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
27-அக்-202113:06:03 IST Report Abuse
R Ravikumar அந்த பெண்ணின் ஆசை / விருப்பம் அவர் கணவரால் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது அவ்வளவுதான் . மேற்கொண்டு விமர்சிக்க இதில் ஏதும் இல்லை . உடனே அன்னதானம் , இலவச மருத்துவமனை என்று இறங்க வேண்டாம் . இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது புரியாது .
Rate this:
Cancel
Janakiraman -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202112:57:38 IST Report Abuse
Janakiraman மனம் நெகிழ் கின்றது .மனைவி இறந்த பின்னரும் அவர் விருப்பத்தை ,பொருளாசை இன்றி நிறைவேற்றியது ! எத்தகைய பாசம், அன்பை இவரது செயல் பிரதி பலிக்கிறது!!!
Rate this:
Cancel
26-அக்-202123:12:43 IST Report Abuse
Gopalakrishnan S ஜெய் மஹாகால் ! ஹர ஹர மகாதேவா !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X