பூஞ்ச் பகுதி தாக்குதல்; பல ஆண்டு காலமாக உத்தரவுக்குக் காத்திருந்த ஸ்லீப்பர் செல்கள்| Dinamalar

பூஞ்ச் பகுதி தாக்குதல்; பல ஆண்டு காலமாக உத்தரவுக்குக் காத்திருந்த ஸ்லீப்பர் செல்கள்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (1)
Share
பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் முன்னதாக நடந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் ஒன்பது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல ஆண்டுகாலமாக உத்தரவுக்காக காத்திருந்த ஸ்லீப்பர் செல்கள் மூலமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த சில மாதங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் முன்னதாக நடந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் ஒன்பது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல ஆண்டுகாலமாக உத்தரவுக்காக காத்திருந்த ஸ்லீப்பர் செல்கள் மூலமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.



latest tamil news



கடந்த சில மாதங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. பயங்கரவாதிகள் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் நடத்தி வந்ததால் பல வெளிமாநில தொழிலாளர்கள் பலியாகினர்.
இந்நிலையில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்த வண்ணம் இருந்தது. பல ஆண்டு காலமாக பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக பணிசெய்யும் ஸ்லீப்பர் செல்கள் தங்களுக்கு தாக்குதல் நடத்த உத்தரவு வந்ததும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தின் டேரா கி காலிபகுதியில் 5 ராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர். மென்ஹர் பகுதியில் மேலும் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அருகில் உள்ள கிராம பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லைக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் எளிதில் ஊடுருவி விடுவது வாடிக்கையாகிவிட்டது.


latest tamil news



பயங்கரவாதிகளை ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக கண்காணிப்பது இந்த மாவட்டத்தில் மிகவும் கடினம். அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மிக உயரத்தில் பறக்க வேண்டியது அவசியம்.
இதனால் இங்கு கண்காணிப்புப் பணி மிகவும் கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இந்திய ராணுவ ஜெனரல் எம்.எம்.நவரானே பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X