விழிப்புணர்வு வாசகங்கள்: பள்ளிகளுக்கு அறிவுரை

Added : அக் 26, 2021 | |
Advertisement
உடுமலை: பள்ளிகளில் விழிப்புணர்வு வாசகங்களை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து கற்பித்தல் பணி நடந்து வருகிறது. ஊரடங்கு இடையில் ஏற்கனவே இம்மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள், வழிமுறைகள் குறித்து புரிதல் உள்ளது.ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 19

உடுமலை: பள்ளிகளில் விழிப்புணர்வு வாசகங்களை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து கற்பித்தல் பணி நடந்து வருகிறது. ஊரடங்கு இடையில் ஏற்கனவே இம்மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள், வழிமுறைகள் குறித்து புரிதல் உள்ளது.ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 19 மாதங்களுக்கு பின், வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஊரடங்குக்கு பின் முதன்முறையாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.இவர்களுக்கு பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த புரிதல் குறைவாகவே இருக்கும். குழந்தைகள் என்பதால் பாதுகாப்பு வழிமுறையாக பின்பற்றுவதில் தடுமாற்றம் இருக்கவே செய்யும்.இதற்குத்தீர்வாக, பள்ளி வளாகங்களில், மாணவர்களின் கண்ணுக்கு தெரியும்படி விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டுமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக, 'கை சுத்தம் உயிர் பேணும்; உணவுப்பொருட்களை பரிமாறிக்கொள்வதை தவிர்ப்போம்; தனிமனித இடைவெளியை பின்பற்றுவோம்; பிறரை தொடுவதை தவிர்ப்போம்; கூட்டத்தை தவிர்க்கவும்; கை சுத்திகரிப்பானால் கைகளை சுத்தம் செய்யவும்; முக கவசம் கட்டாயம் அணியவும்' போன்ற வாசகங்களை அனுப்பியுள்ளது.அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X