சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் பட்டாசு குடோனில் தீ : 10 பேர் உடல் கருகி பலி

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் மின்கசிவால் பட்டாசு குடோன் தீ பிடித்து எரிந்ததில்,அருகிலிருந்த 4 கடைகள் தரைமட்டமானது. விபத்தில் 10 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர்கடைவீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.தீபாவளிபண்டிகையினையொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுக்களை வரவழைத்து, கடையின்பின்புறம்

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் மின்கசிவால் பட்டாசு குடோன் தீ பிடித்து எரிந்ததில்,அருகிலிருந்த 4 கடைகள் தரைமட்டமானது. விபத்தில் 10 பேர் பலியாகினர்.



latest tamil news



கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர்கடைவீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.தீபாவளிபண்டிகையினையொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுக்களை வரவழைத்து, கடையின்பின்புறம் உள்ள குடோனில் சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் மின்கசிவு காரணமாக நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டாசு குடோன் தீபிடித்து எரிய தொடங்கியது.
உடன் அங்கு இருந்த பட்டாசுக்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதன் அருகில் இருந்த அய்யங்கார் பேக்கரி, மம்மிடாடி ரெடிமேட்ஸ் கடைகளிலும் தீபரவியது. இதில் பேக்கரியில் இருந்த 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள்ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால், கடைகள் இடிந்து தரைமட்டமானது.இவ்விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்.


latest tamil news



தகவலறிந்து சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் அய்யப்பன், கள்ளக்குறிச்சிமற்றும் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குசென்று தீயிணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் தடைபட்டதாலும்,சிலிண்டர்கள் வெடித்ததாலும் தீயிணை உடனடியாக அணைக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சை பலனின்றி 10 பேர் பலியாகினர்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல்ஹக், ஆர்.டி.ஓ., சரவணன் (பொ), தாசில்தார் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுவரை பட்டாசு விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
27-அக்-202112:57:09 IST Report Abuse
சீனி கடந்த வருடம் வேலூர் சம்பவம் இன்னும் மறக்க முடியவில்லை. மக்கள் நெருக்கமான பகுதிகளில் கடைக்கு தீயணைப்பு துறை அனுமதி கொடுக்கக்கூடாது. அதே போல் பட்டாசு கடை ஊழியர்களுக்கு 1கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்தால் தான் அனுமதி என்ற நிபந்தனையும் வேண்டும்.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-அக்-202112:01:31 IST Report Abuse
Raj அரசியலுக்காக பட்டாசு வெடிக்க தடை செய்ய கூடாது என கடிதம் எழுதியவர்கள், உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், பயனாளர்களுக்கு பாதுகாப்பாக எல்லா சேப்டி நடை முறைகளை அமுள்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்களா?
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
26-அக்-202123:32:37 IST Report Abuse
abdulrahim மிகுந்த வேதனை, உரிய அனுமதி பெறாமல் இப்படி அப்பாவி உயிர்கள் பலியானதை மன்னிக்க முடியாது, பெரும்பாலும் கடையில் வேலை செய்யும் ஏழை தொழிலாளர்கள் தான் இறந்திருக்க கூடும், துயரமான சம்பவம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X