பொது செய்தி

தமிழ்நாடு

11 மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Added : அக் 26, 2021
Share
Advertisement
சென்னை: ''தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்,'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 12 வகையான நோய்களை தடுக்க, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எல்லா வகையான தடுப்பூசிகளும்
11 மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை

சென்னை: ''தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்,'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 12 வகையான நோய்களை தடுக்க, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எல்லா வகையான தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், 9.42 லட்சம்; பெண்களுக்கான தடுப்பூசிகள் 10.43 லட்சம் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை 5.68 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன; 44 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

ஆறு மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, 1.33 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை, 7வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் மையங்களில் நடத்தப்படும். வார நாட்களிலும், தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, நானும், துறை செயலரும், இன்று டில்லி செல்கிறோம். அப்போது, 11 புதிய மருத்துவ கல்லுாரிகளிலும், முழுமையான மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டே அனுமதி வழங்கக்கோரி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

தற்போது வரை, 850 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,650 மாணவர்களை அனுமதிக்கலாம். தமிழகத்தில் 19 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்கு, 950 கோடி நிதி வேண்டியும் கோரிக்கை வைக்கப்படும்.முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை அடுத்த வாரம் வழங்கப்படும். பண்டிகைகளை கொண்டாட தடை இல்லை. முககவசம், சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X