பழைய நிலைக்கு திரும்பும் ஓடை தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்| Dinamalar

பழைய நிலைக்கு திரும்பும் ஓடை தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்

Added : அக் 26, 2021
உடுமலை: உடுமலை தங்கம்மாள் ஓடையின் நீர் வழித்தடத்தில், மண் மேடுகளை அகற்றி, துார்வாரி, கரையில், வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை நகரின், முக்கிய மழை நீர் ஓடையாக இருந்த தங்கம்மாள் ஓடை, ஆக்கிரமிப்புகளால், சுருங்கி, கழிவு நீர் கலந்து, சாக்கடையாக மாறியது.நகர குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள இந்த ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி,

உடுமலை: உடுமலை தங்கம்மாள் ஓடையின் நீர் வழித்தடத்தில், மண் மேடுகளை அகற்றி, துார்வாரி, கரையில், வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை நகரின், முக்கிய மழை நீர் ஓடையாக இருந்த தங்கம்மாள் ஓடை, ஆக்கிரமிப்புகளால், சுருங்கி, கழிவு நீர் கலந்து, சாக்கடையாக மாறியது.நகர குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள இந்த ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.அதே போல், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஓடையை ஒட்டி வரும், ரோடு அகலப்படுத்தும் பணிக்காக, மத்திய அரசு நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ், 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது.இந்நிலையில், 'முழுமையாக ஓடையின் நீர் வழித்தடம் மீட்கப்படாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்படுகிறது; ஓடை அகலம் அதிகமாக இருக்கும் நிலையில், நீர் வழித்தடத்தை குறுக்கியும், வளைவுகளுடனும் தடுப்புச்சுவர் அமைப்பதாகவும், முழுமையாக அளவீடு செய்து, ஓடையை அகலப்படுத்திய, பின்னர், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்,' என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, ஓடையை முழுமையாக அளவீடு செய்து, கான்கிரீட் கரை என, அப்போது நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, தற்போது, ஓடையின் குறிப்பிட்ட துாரத்துக்கு, மண்மேடுகள் முழுமையாக அகற்றப்பட்டு, துார்வாரும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.மேலும், உடுமலை நகராட்சி நுாற்றாண்டு விழா வளர்ச்சிப்பணிகள் சிறப்புத்திட்டத்தின் கீழ், 12.97 கோடி ரூபாய், தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணிகளுக்காக, ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியில், தங்கம்மாள் ஓடையை ஒட்டி, நடைபாதை அமைக்கவும், தடுப்புச்சுவர் கட்டவும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X