பா.ஜ., தொண்டர்கள் தியாகம் பிரதமர் மோடி பெருமிதம்| Dinamalar

பா.ஜ., தொண்டர்கள் தியாகம் பிரதமர் மோடி பெருமிதம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி :''மத்தியிலும், பல மாநிலங்களிலும் சேவை செய்ய, பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு, மக்களின் ஆசியும், தொண்டர்கள் பலரின் ஒப்பற்ற தியாகமும் தான் காரணம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:'நமோ' செயலியில், 'கமல் புஷ்ப்' என்ற பகுதி உள்ளது. இதில், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு மாபெரும் தியாகம் செய்த தொண்டர்கள் குறித்த
பா.ஜ., தொண்டர்கள், தியாகம் , மோடி பெருமிதம்

புதுடில்லி :''மத்தியிலும், பல மாநிலங்களிலும் சேவை செய்ய, பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு, மக்களின் ஆசியும், தொண்டர்கள் பலரின் ஒப்பற்ற தியாகமும் தான் காரணம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:'நமோ' செயலியில், 'கமல் புஷ்ப்' என்ற பகுதி உள்ளது. இதில், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு மாபெரும் தியாகம் செய்த தொண்டர்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்று உள்ளன. மக்களின் ஆசியாலும், தொண்டர்கள் பலரின் ஒப்பற்ற தியாகத்தாலும், மத்தியிலும், பல மாநிலங்களிலும் சேவை செய்ய, பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பா.ஜ., மீது மக்கள் தற்போது வைத்துள்ள நம்பிக்கைக்கு, தொண்டர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை, கட்சி பணிக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி அர்ப்பணித்ததே காரணம். தேசத்தின் மீது அவர்கள் வைத்துள்ள பற்று, தேசத்தின் வளர்ச்சி மீது இருந்த ஆர்வம், அவர்களை அந்த தியாகத்தை செய்ய வைத்துள்ளது. ஜனசங்கம் துவங்கிய காலத்திலிருந்து இப்போது வரை கட்சிக்காக தியாகம் செய்த தொண்டர்கள் குறித்து, கமல் புஷ்ப் பகுதியில் பதிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கேதார்நாத் செல்கிறார்



உத்தரகண்டின் இமய மலையில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுக்கு ஒருமுறையாவது கேதார்நாத் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு கேதார்நாத்துக்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில், நவ., 5ம் தேதி கேதார்நாத்துக்கு பிரதமர் மோடி வரவுள்ளதாக, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:கேதார்நாத் கோவிலுக்கு நவ., ௫ல் வரும் பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின், கேதார்நாத் பகுதியில் 400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களை, பிரதமர் துவக்கி வைக்கிறார்.
மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையையும் மோடி திறந்து வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X