அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு அன்றாடம் நிவாரண பொருள் அனுப்பப்படும்: வானதி தகவல்

Added : அக் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,சார்பில் கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் லாரிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.கேரளாவில் மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, பா.ஜ., இளைஞர் அணி சார்பில், கோவை குஜராத் சமாஜிலிருந்து லாரிகளில் நிவாரணப்பொருட்களை கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ., தேசிய செயலாளர் அருண்சிங் அனுப்பி வைத்தார்.இதைத்தொடர்ந்து
கேரளா,  நிவாரண பொருள், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி

கோவை:கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,சார்பில் கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் லாரிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளாவில் மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, பா.ஜ., இளைஞர் அணி சார்பில், கோவை குஜராத் சமாஜிலிருந்து லாரிகளில் நிவாரணப்பொருட்களை கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ., தேசிய செயலாளர் அருண்சிங் அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பா.ஜ.,பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில், காந்திபுரம் பா.ஜ., அலுவலகத்திலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை மூன்று லாரிகளில் நிவாரணப்பொருட்களை நேற்று முன் தினம் அனுப்பி வைத்தார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் சார்பில் நேற்று கோவை இடையர்வீதி அதிஷ்டவிநாயகர் கோவிலிலிருந்து, கேரளாவுக்கு நிவாரணப்பொருட்கள் ஏற்றிய லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
வானதிசீனிவாசன் பேசியதாவது:கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது நம் சகோதர சகோதரிகள் அவர்களுக்கு நாம் அனைவரும் உதவ வேண்டும். அதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான துணிமணிகள், பிரட்,பிஸ்கட், பால்பவுடர், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி துண்டு, நைட்டி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.


latest tamil news



இதன் மதிப்பு ஆறு லட்சமாகும்.பா.ஜ.,வில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு அமைப்பும் கேரளாவிற்கு நிவாரணப்பொருட்களை வரிசையாக அனுப்பி வைக்கும் பணியில் இறங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லாரிகளில் நிவாரணப்பொருட்கள் கோவையிலிருந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202118:32:20 IST Report Abuse
மோகனசுந்தரம் மிகவும் நன்று சகோதரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X