மொபைல் போன்களை ஒட்டு கேட்கிறார் வான்கடே மீது மாலிக் அடுத்த குற்றச்சாட்டு

Updated : அக் 28, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை,:''மும்பை மற்றும் தானேவில், வி.ஐ.பி.,க்கள் சிலரின் மொபைல் போன்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே ஒட்டுக் கேட்கிறார்,'' என, மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டி உள்ளார்.20பேர் கைது மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையில் சொகுசு
மொபைல் போன்கள்,ஒட்டு , வான்கடே ,மாலிக் அடுத்த குற்றச்சாட்டு

மும்பை,:''மும்பை மற்றும் தானேவில், வி.ஐ.பி.,க்கள் சிலரின் மொபைல் போன்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே ஒட்டுக் கேட்கிறார்,'' என, மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டி உள்ளார்.


20பேர் கைது



மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட ௨௦ பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.


பரபரப்பு புகார்

மஹாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக். இவரது மருமகனை கடந்த சில மாதங்களுக்கு முன், போதைப் பொருள் வழக்கில் வான்கடே கைது செய்தார். அப்போதிலிருந்து வான்கடேவை, நவாப் மாலிக் விமர்சித்து வருகிறார்.

ஆர்யன் கைது சம்பவத்துக்கு பின், வான்கடே மீது நவாப் மாலிக் தினமும் பரபரப்பு புகார் கூறி வருகிறார். ஷாருக் கான் மகனை விடுவிக்க, பேரம் பேசியதாக சமீபத்தில் வான்கடே மீது புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நவாப் மாலிக் கூறியதாவது:இரண்டு பேரின் உதவியுடன், மும்பை மற்றும் தானேவில் உள்ள வி.ஐ.பி.,க்கள் சிலரின் மொபைல் போன்களை வான்கடே ஒட்டுக் கேட்டு வருகிறார்.

இது தொடர்பாக, வான்கடே மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க போகிறேன். அதில், போன் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் கொடுப்பேன். அத்துடன், பதவியை வைத்து வான்கடே செய்துள்ள 24க்கும் அதிகமான சட்ட விரோத செயல்களையும் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


டில்லியில் வான்கடே

ஆர்யன் வழக்கில் சாட்சி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வான்கடே மீது விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, டில்லிக்கு நேற்று முன்தினம் இரவு வான்கடே வந்தார். டில்லி விமான நிலையத்தில்வான்கடே வந்திறங்கிய போது, அவருக்கு ஆதரவாக சிலர் 'போஸ்டர்'களை ஏந்தி கோஷம் எழுப்பினர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை சென்ற வான்கடே, அங்கு உயர் அதிகாரிகளை சந்தித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
27-அக்-202121:16:49 IST Report Abuse
Ramesh மாலிக் ஷாருகானிடம் இருந்து பணம் வாங்கி இருப்பார். PK கூட்டம் அப்படி தான் பேசும். SS வும் இப்போ மாரிடுச்சா .ஜெய் இந்தியா
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-அக்-202119:13:02 IST Report Abuse
sankaseshan நவாப்மாலிக் பெயரே சொல்லுறது காநும் இவங்க கூட்டம்தான் அதுதான் பொங்கறான்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-அக்-202116:02:37 IST Report Abuse
DVRR அவர் சொன்னது 100% சரி. ஆகவே தான் அவர்கள் இந்த போதை மருந்து வியாபாரத்தை எப்படி தங்கள் போன் தொடர்பு இல்லாமல் ஆனால் தங்கள் தயவுடன் நடத்த அவர்கள் மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கின்றது என்று மிக கடு கடுப்பாகிவிட்டனர் என்று நவாப் மாலிக் சொல்வதாக அறிந்து கொள்ளவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X