பொது செய்தி

தமிழ்நாடு

துறை வாரியாக திட்டப் பணிகள் : அரசிடம் தகவல் கேட்கிறார் கவர்னர்

Updated : அக் 28, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை :தமிழக கவர்னர், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிய விரும்புவதால், திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராகும்படி, அரசு துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.அ.தி.மு.க., ஆட்சியில், கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாவட்ட வாரியாக ஆய்வுக்கு சென்றார். இதற்கு, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வும் அதன் கூட்டணி
திட்டப் பணிகள் , தகவல் ,கவர்னர்

சென்னை :தமிழக கவர்னர், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிய விரும்புவதால், திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராகும்படி, அரசு துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில், கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாவட்ட வாரியாக ஆய்வுக்கு சென்றார். இதற்கு, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் சென்ற இடங்களில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தின.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக, தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களை, அவ்வப்போது கேட்டு வருகிறார்.

தி.மு.க., அரசு மீது, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., சார்பில், கவர்னரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள, கவர்னர் முடிவு செய்திருப்பது, துறை செயலர்களுக்கு, தலைமை செயலர் இறையன்பு எழுதிய கடிதம் வழியாக தெரிய வந்துள்ளது.

அனைத்து அரசு துறை செயலர்களுக்கு இறையன்பு எழுதியுள்ள கடிதம்:

தமிழக கவர்னர், மாநிலத்தில் உள்ள சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் தற்போது செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள், மாநில, மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து அறிய விரும்புகிறார்.
எனவே, கவர்னரிடம் உங்கள் துறையில் செயல்படுத்தப்படும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கவும். இதற்காக, 'பவர் பாயின்ட்' விளக்க காட்சியும் தயாரிக்கலாம். தயாரிக்கப்பட்ட, 'பவர் பாயின்ட்' விளக்க காட்சிக்கு முன் விவாதிக்கப்பட வேண்டும். தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இக்கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துறை வாரியாக திட்டங்கள் குறித்து கவர்னர் கேட்கலாமா; ஆய்வு செய்யலாமா; முதல்வர் இதை அனுமதிப்பாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள விளக்கம்:


அலுவல் ரீதியாக துறையின் செயலர்களுக்கு, நான் அனுப்பிய ஒரு கடிதம், அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன். தமிழகத்திற்கு கவர்னர் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில், அதற்கான தரவுகளை திரட்டி வைத்துக் கொள்ளும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும், அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.

திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து, இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது, நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதை அரசியல் சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு, இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


காங்கிரஸ் எதிர்ப்பு!
'தமிழக அரசு துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கை, கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:கவர்னரை பொறுத்தவரை அமைச்சரவையின் அறிவுரைபடியும், ஆலோசனைபடியும் தான் செயல்பட முடியும்; நேரடியாகச் செயல்பட முடியாது. மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தருமாறு, கவர்னர் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை.

இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ.,வை காலுான்ற செய்வதற்கான முயற்சியில், கவர்னர் ஈடுபடுகிறாரோ என்ற, சந்தேகம் வலுப்பெறுகிறது. ஏற்கனவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ., கட்சி, கவர்னரின் நடவடிக்கையால், மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.


பா.ஜ., ஆதரவு; தி.மு.க., வரவேற்பு!
* தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:மத்திய அரசு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, முதல்வரையும், தலைமை செயலரையும் அழைத்து பேசி, கவர்னர் தன் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அவர்களும் ஏற்று, அவர் கேட்ட தகவல்களை அளிக்க தயாராகி இருக்கின்றனர். அவர்களுக்கு புரிந்த யதார்த்தம், கூடவே இருக்கும் பூசாரி அரசியல் தலைவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்தில் சிறப்பாக செயல்படவும், மக்கள் அமைதியான வாழ்க்கை வாழவும், கவர்னர் எடுக்கும் முயற்சிகள் பக்கபலமாக இருக்கும் என்றால், கவர்னரின் செயல்பாடுகளுக்கு, தமிழக பா.ஜ., பக்கபலமாக இருக்கும்.


* தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிக்கை:முதல்வரும், தலைமைச் செயலரும், கவர்னரை சந்தித்த போது, 'மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து, துறைத் தலைவர்கள், 'பவர் பாயின்ட்' விளக்கம் அளித்தால், விபரமாக அறிந்து கொள்வேன்' என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.இதில் எந்த இடத்திலும், அதிகார துஷ்பிரயோகம் இல்லை. முதல்வருக்கு தெரியாமல், அதிகாரிகளை கூப்பிட்டு, ஆய்வு நடத்துவேன் என கவர்னர் கூறியிருந்தால், அது தவறு. கவர்னர் அவ்வாறு கூறியிருந்தால், எதிர்த்திருப்போம்.

கவர்னர் தன் அதிகார எல்லைக்குள் இருந்து, விபரங்களை கேட்கும் போது, தமிழக அரசு தன் கடமையை செய்கிறது. வரம்பு மீறாமல் கவர்னரின் செயல்பாடு, சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும்போது, மாநில அரசு ஒத்துழைப்பதில் தவறில்லை.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
27-அக்-202119:24:16 IST Report Abuse
sankaseshan பவர்பாய்ண்ட் விளக்கம் தரப்படும் என்று முதலில் சொந்நது இறைஅன்பு கடிதம் மூலமாக தெரிவித்தார் முதல்வருக்கு கவர்னரை நேரில் சந்திக்க துணிவில்லை இறையன்பு தூதர் Admk ஆட்சியில் பன்வாரிலால் புரோஹித்துக்கு எவ்வளவு குடைச்சல் கொடுத்தார்கள் எடுத்ததுக்கெல்லாம் சுடலை கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார் ஆட்சியில் அமர்ந்தவுடன் கவர்னர பார்க்க பயம் ,இரட்டை நிலைப்பாடு
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
27-அக்-202119:05:27 IST Report Abuse
elakkumanan லேபிள் மாற்றி ஓட்டுவது, வெறும் நடுகல் நட்டுவிட்டு பிறகு எஸ்கேப் ஆவது, வெறும் கையில் முழம் போடும் பேப்பர் திட்டங்கள், கமிஷன் திட்டங்கள், சொந்த வளர்ச்சி திட்டங்கள்...இப்பிடி பிரித்து கவனிக்க ஏதுவாக இருக்கும்.. இறையன்பு நல்ல அதிகாரி.. அவருக்கு இது ஒரு சத்திய சோதனை காலம்தான்.. உண்மையில் நேர்மை என்பது உடம்பில் உள்ள ரத்தம் மாதிரியா அல்லது மேலே போடும் சட்டை மாதிரியா ன்னு இந்த முறை வெளிவந்துவிடும்...பார்க்கலாம்.... என்னவோ இவர்களுக்கு எல்லா அதிகாரமும் வந்துவிட்டது போலவும், கவர்னர் பதவியின் அதிகாரத்தை அளவிட முயல்வதெல்லாம் ....ஐயோ பாவம்...முதலில், நீட் தடை வாங்குங்க....அதுலயும், தன்னோட கட்சிக்கு ஒரு நிரந்தர தலைமையை கண்டுபிடிக்க முடியாத , இதுக்கு மேல அசிங்கப்படவே முடியாத நிலையில் இருக்கும் கட்சி தலைமை எதுக்கு துள்ளுது ன்னு தெரியல... ஏதோ விவகாரம் மாட்டியிருக்கு.. பாக்கலாம்... இப்போதான பல்டி ஆரம்பிச்சிருக்கோம்... இனி, அந்தர்பல்டி அப்பொறம், தலைகுப்பற பல்டி....ஒன்னொன்னா வரும்.. வரணும்.. தெளிவா திருடினால், யோக்கியன் என்பது நம்ம திராவிட வாழ்க்கை தத்துவம்...அதாவது, தொழில்முறை திருடன் என்றால், நல்லவன்....கால கொடுமை......அண்ணாமலை மேல் வழக்கு தொடுக்கலாமே.....அவர்தான் கோர்ட் க்கு வாங்க ன்னு சொல்லுறாரே.... அப்பொறம் எதுக்கு தெருவில் நின்னு கத்துறீங்க......
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-அக்-202117:35:07 IST Report Abuse
மலரின் மகள் கொரானாவின் பொது அன்று ஒன்லைன் வகுப்புக்கள் பிபிடி போன்றவையே மாணவர்கள் ஆசிரியர்களிடையே டாக் ஆப் தி வகுப்புக்களாக இருந்தன. இன்று திமுகவின் ஆதரவு கட்சி தலைவர்கள், மா ஆ, துறை தலைவர்கல் மற்றும் கட்சியினரிடையே பிபிடி தான் டாக் ஆப் தி தமிழ் நாடாக இருக்கிறது. ஒன்றியம் என்று சாக் கொடுத்தார்கள், கொங்கு நாடு என்று சொல்லி முடித்துவைத்தார்கள். பெட்ரோல் விலை என்கிறார்கள், ஜி எஸ் டி என்று சொல்லி திருப்பி விட்டு விட்டார்கள். நீட் என்கிறார்கள், பிபிடி என்று தகவல் கேட்டார்கள். என்ன நடக்கிறது. எப்படி சமாளிக்கிறார்கள் தளபதியின் தொண்டர்படையினர். ஆட்சிக்கு வந்த உடனேயே சொன்னோம், ஆட்சிக்கட்டியலில் அமர்ந்ததும் வாழ்த்துக்கள். நிதி நிலைமை சீராக்கப்படவேண்டும். நிறைய பிரச்சினைகள் உள்ளது. ஒய்யார கொண்டையும் மல்லிகை மனமும் வேண்டாம். நடுவனரசுடன் இணைந்து செல்லுங்கள். நிறைய எம்பிக்கள் இருக்கிறார்கள். அனுசரித்து சென்று தமிழகத்திற்கு நிறைய பெற்று வரலாம். இன்றைய மத்திய அரசால் தான் காவிரி பிரச்சினை கூட தீர்க்கப்பட்டுவிட்டது. முடியவே முடியாது என்று சொன்னவர்களும் வெறும் திடீர் உண்ணாவிரதத்தாலும், ஆம்னி பேருந்துகளில் திரைத்துறையினரை அழைத்து கோட்டமாக செல்வதாலும் எதுவும் நடக்காது. மத்திய அரசு செய்யவேண்டியது இருக்கிறது முக்கியமாக என்று. காங்கிரஸ் சென்று புதிய ஆட்சி வந்தவுடனேயே காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டது. இப்போது அதுபோலவே முக்கியமாக முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்த்து வைகை நதியை வளம் பெற செய்யலாம். ராமேஸ்வரத்திற்கு நீர் ஆதாரம் வைகை மூலம் வழங்க திட்டம் தீட்டி அதை செயல்படுத்த முல்லை பெரியாறு நீர் முழுதும் தேவை என சொல்லியே காரியத்தை சாதித்து கொள்ளலாம். கேரளாவில் இருப்பது வேண்டாத அரசாக இருப்பதுபோல பிம்பமிருப்பதால் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். கம்யூனிசம் காங்கிரஸம் இரண்டும் தமிழகத்தில் இல்லை. ஆகையால் தாராளமாக காயை நகர்த்தி தாமரையிடம் நிறைய பெற்று கொள்ளலாம். தேவை புத்திசாலித்தனமும் சமயோசித்தமும் என்று நிறைய வாசகர்கள் எழுதி இருந்தோம். அதையே நினைவூட்டிக்கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X