ஒற்றுமையும் இல்லை; தெளிவும் இல்லை : சோனியா வருத்தம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (24+ 15)
Share
Advertisement
காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா, ''கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை; கட்சி கொள்கைகள் குறித்த தெளிவு இல்லை,'' என, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.கட்சியின் கொள்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு துவக்கத்தில்
ஒற்றுமை, தெளிவு, காங்.,கூட்டம், சோனியா வருத்தம்

காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா, ''கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை; கட்சி கொள்கைகள் குறித்த தெளிவு இல்லை,'' என, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.கட்சியின் கொள்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.


கொள்கை உறுதி



இதையொட்டி, காங்., மேலிட பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.இதில், கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா பேசியதாவது:இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தான், எந்தவொரு அமைப்புக்குமே முக்கியமாக அமையும்.

அவர்களை நல்ல புரிதலுடன் வழிநடத்தி, சரியான பாதையை உருவாக்கித் தர வேண்டியது மூத்தவர்களின் கடமை.கட்சியின் கொள்கைகளை முழுதுமாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே, கட்சியின் மீதான தவறான பிரசாரத்தை முறியடிக்க முடியும். இதற்கான பயிற்சிகள் கீழ்மட்ட அளவிலிருந்து அனைத்து நிலைகளிலும் நடத்தப்படும்.பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றின் சித்தாந்தங்களை எதிர்த்து போராட வேண்டும். அதற்கு, நம்மிடையே கொள்கை உறுதி வேண்டும்.


சண்டையிட வேண்டும்



மக்கள் மத்தியில் அவர்களது பொய்களை அம்பலப்படுத்துவதன் வாயிலாக, இந்த போரில் நாம் வெல்ல முடியும்.முக்கிய பிரச்னைகள் குறித்து கட்சியின் சார்பில் தினமும் அறிக்கைகள் விடப்படுகின்றன.ஆனாலும் கூட, அவற்றின் விபரங்கள் கீழ்மட்டத் தொண்டர்களை சென்றடையவில்லையோ என தோன்றுகிறது.கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமை, கொள்கை தெளிவின்மை இருப்பதாகவும் தெரிகிறது. கொள்கைகள் குறித்த போதுமான புரிதல்களோ, தெளிவுகளோ இல்லாத நிலை, மாநில அளவிலான நிர்வாகிகளிடமும் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையை மாற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தி, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பரப்பும் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் தீவிரமாக செயல்படுவதற்கு, கட்சிக்குள் சித்தாந்த பலத்தை நிறுவ வேண்டும்.அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் முக்கிய அமைப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி அரசு வலுவிழக்கச் செய்து வருகிறது.இந்நிலை தொடர்வதால் ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளே கேள்விக்குறியாகி வருகின்றன.மத்திய அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் நாம்சண்டையிட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக, நான் திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்வ தெல்லாம், ஒற்றுமையும், கட்டுப்பாடும் தான். சொந்த நலன்களுக்கு அப்பாற்பட்டு கட்சியைப் பலப்படுத்தும் வகையில் தான், நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


உறுப்பினர் சேர்க்கை



காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது தொடர்பாக, செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கை, நவ., 1ல் துவங்கி, அடுத்தாண்டு மார்ச் 31 வரை நடக்கும்.முதல்முறை வாக்காளர்களை கட்சியில் சேர்க்க முக்கியத்துவம் தரப்படும்.கட்சியின் கொள்கைகள் மீது, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.அவற்றை முறியடிக்கும் வகையில் கட்சியின் கொள்கைகள் குறித்த பயிற்சி முகாம்களும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். -- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (24+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-அக்-202122:55:52 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் அம்மையார் சிதம்பரத்தை குறை சொல்றாங்க நமக்கு என்ன போச்சி ? விடுங்க
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
27-அக்-202121:12:34 IST Report Abuse
Ramesh முதலில் நேரு குடும்பத்துக்கு எப்படி காந்தி surname வந்தது.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
27-அக்-202117:20:38 IST Report Abuse
M S RAGHUNATHAN காங்கிரஸின் கொள்கை மோடி ஒழிக. ராகுல் வாழ்க. சோனியா வாழ்க. கபில் சிப்பல் ஒழிக. அமித் ஷா ஒழிக. அவ்வளவு தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X