நீர்மூழ்கி கப்பல் தகவல் கசிவு : கடற்படை அதிகாரி கைது

Added : அக் 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி :நாட்டின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி உட்பட மூன்று பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.இந்திய கடற்படையில் உள்ள சிறப்பு வகை நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுதொடர்பான தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதுபற்றி விசாரிக்க கடற்படை உயர் அதிகாரி தலைமையில்
நீர்மூழ்கி கப்பல் தகவல் கசிவு  : கடற்படை அதிகாரி கைது

புதுடில்லி :நாட்டின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி உட்பட மூன்று பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.இந்திய கடற்படையில் உள்ள சிறப்பு வகை நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதுபற்றி விசாரிக்க கடற்படை உயர் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரணையை விரைவு படுத்தினர். தற்போது பணியில் உள்ள கமாண்டர் பொறுப்பில் உள்ள கடற்படை அதிகாரிக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.


latest tamil news



இதையடுத்து மும்பையில் பணியில் இருந்த கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற இரு கடற்படை அதிகாரிகளை சி.பி.ஐ., து செய்தது.இவர்கள் வாயிலாக நீர்மூழ்கி கப்பல் தகவல் பகிர்வில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது.இதற்கிடையே கடற்படை அதிகாரிகளை தங்கள் பக்கம் சாய்த்து, கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசிய தகவல் சேகரிப்போர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இதன்படி 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் வாயிலாக ரகசிய தகவல்களை அதிகாரிகளிடம் பெற்று பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அல்தாப் ஹுசைன் ஹருண் காஞ்சி என்பவரை குஜராத்தின் கோத்ராவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
27-அக்-202110:10:25 IST Report Abuse
Soumya உயர் பதவிகளில் மூர்க்கர்களை பணி அமர்த்த கூடாது தன் மதத்துக்காக நாட்டை காட்டிக்குடுக்க தயங்கமாட்டான்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27-அக்-202107:40:13 IST Report Abuse
VENKATASUBRAMANIAN வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் வருமே
Rate this:
Cancel
27-அக்-202106:06:41 IST Report Abuse
ஆரூர் ரங் குஜராத் கோத்ரா ? அதே ரயில் எரிப்பு👹 மர்ம கும்பல்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X