அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கட்சி எப்படி இருக்கு... உண்மையை சொல்லுங்க' காங்., பொறுப்பாளர் கேள்வி

Added : அக் 26, 2021
Share
Advertisement
திருப்பூர்:'கட்சி எப்படி இருக்கு; உண்மையை சொல்லுங்க' என, திருப்பூரில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம், காங்., தமிழக பொறுப்பாளர் கேள்வி எழுப்பினார். திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தமிழக காங்., பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஒரு பெண் கூட பங்கேற்காத நிலையில், 'மகிளா காங்., எங்கே?' என பொறுப்பாளர் கேட்க, 'அவர்கள்
 'கட்சி எப்படி இருக்கு... உண்மையை சொல்லுங்க' காங்., பொறுப்பாளர் கேள்வி

திருப்பூர்:'கட்சி எப்படி இருக்கு; உண்மையை சொல்லுங்க' என, திருப்பூரில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம், காங்., தமிழக பொறுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தமிழக காங்., பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஒரு பெண் கூட பங்கேற்காத நிலையில், 'மகிளா காங்., எங்கே?' என பொறுப்பாளர் கேட்க, 'அவர்கள் யாரும் வரவில்லை,' என்று மாவட்ட தலைவர் சொன்னதும், கடுப்பானார்.

அதன்பின் பேசிய, ஸ்ரீ வல்லபிரசாத், ''திருப்பூரில் கட்சி எப்படி இருக்கு? நீங்க என்ன வேலை பார்த்து இருக்கீங்க. உண்மையை சொல்லுங்க. பஞ்சாயத்து அளவில, நம் கட்சி என்ன நிலையில் உள்ளது. எல்லா இடத்திலும் கட்சிக்கு ஆபீஸ் இருக்குதா?'' என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.

அதற்கு நிர்வாகிகள், 'கட்சி மேலிடத்தில் இருந்து நிதியே வருவதில்லை. திராவிட கட்சிகள் கோடி கோடியாக செலவு செய்து, தேர்தலில் ஜெயித்து விடுகின்றனர். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில், நம் கட்சி தனித்து தான் போட்டியிட வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X