ராமநாதபுரம் : மாவட்டத்தில் நடப்புஆண்டில் ஜனவரியில்அதிகபட்சமாக 200 மி.மீ., மழையால் கோடையில் கண்மாய்கள் வற்றவில்லை. தற்போது வரை 556 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனையடுத்து வயலில் உழுவது, நெல்விதைப்பு, உரமிடும் ஆகிய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டடத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி 1.33 லட்சம் எக்டேர் பரப்புஅளவில் நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.சிறுதானியங்கள் 25ஆயிரம் ஏக்கர், பயறுவகைகள் 10ஆயிரம் ஏக்கர், எண்ணெய் வித்து 6 ஆயிரம் ஏக்கர் பயிரிடுகின்றனர். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை ஆண்டிற்கு சராசரியாக 827 மி.மீ., பெய்யும். கடந்த 2 ஆண்டாக சராசரியை விட கூடுதலாக அதாவது 2019ல் 913 மி.மீ., மற்றும் 2020ல் 845.25 மி.மீ., மழை பெய்துள்ளது.
நடப்பாண்டில் ஜனவரியில் 247 மி.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக கோடையிலும் கண்மாய்களில் நீர் வற்றவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மொத்தம் 1753 கண்மாய்களில் 500 கண்மாய்களில் 40 முதல் 60 சதவீதம் நிரம்பியுள்ளன. தொடர்ந்து இவ்வாண்டு இதுவரை ஜனவரி முதல் அக்டோபர் வரை 556.22 மி.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 48 மி.மீ., கூடுதலாகும்.
இதன்காரணமாக வயலில் உழுவது, நெல்விதைப்பு, உரமிடும் பணி தீவிரமடைந்துள்ளன.1 லட்சத்து 34 ஆயிரம்எக்டேர் வரை நெல், பருத்தி, சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளன. மகசூல் அதிகரிக்க தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படுகிறது என வேளாண் அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE