'பெகாசஸ்' ஒட்டு கேட்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :'பெகாசஸ்' போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பளிக்கிறது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக
 காசஸ் ஒட்டு கேட்பு,வழக்கு, இன்று தீர்ப்பு

புதுடில்லி :'பெகாசஸ்' போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பளிக்கிறது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.


மனு தாக்கல்



latest tamil news



'இந்த விவகாரத்தை தனி அதிகாரம் படைத்த அமைப்பின் வாயிலாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், பெகாசஸ் மென்பொருளை சட்ட விரோதமாக மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. விரிவான அறிக்கை தாக்கல் செய்வது தேச நலனுக்கு நன்மை அளிக்காது. 'எனவே அறிக்கை தாக்கல் செய்ய விரும்பவில்லை. நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கிறோம்' என, தெரிவித்தது.


விசாரணை


இதைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்படும்.'தனி அதிகாரம் படைத்த அமைப்பு விசாரணை நடத்துவது குறித்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்' என, சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட
உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
27-அக்-202109:17:36 IST Report Abuse
duruvasar டமாலுன்னு ஒரு டவுட் வருதே.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
27-அக்-202107:46:49 IST Report Abuse
Elango மத்திய அரசுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும்.... இதே பாணியில் அடுத்த தேர்தலில் திருட்டு வேலை நடக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X