அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி கட்டுக்கோப்பை தலைமையே குலைக்கிறது: ம.தி.மு.க.,வில் பனிப்போர்: நிர்வாகிகள் அதிருப்தி

Added : அக் 27, 2021
Share
Advertisement
திருப்புத்துார்:தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறிய பின் முதல் கூட்டம் நடத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் தற்போது கட்சியில் உள்ள வேறுபாடு வெளிப்பட்டுள்ளது. தி.மு.க.,வை விட்டு வெளியேறிய வைகோ முதலில் திருப்புத்துாரில் தான் பொதுக்கூட்டம் நடத்தினார். பிரமாண்டமாக நடந்த, மக்கள் நிறைந்த கூட்டத்தில் தி.மு.க.,வின் குடும்ப அரசியலை கண்டித்து மணிக்கணக்கில் வைகோ

திருப்புத்துார்:தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறிய பின் முதல் கூட்டம் நடத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் தற்போது கட்சியில் உள்ள வேறுபாடு வெளிப்பட்டுள்ளது.

தி.மு.க.,வை விட்டு வெளியேறிய வைகோ முதலில் திருப்புத்துாரில் தான் பொதுக்கூட்டம் நடத்தினார். பிரமாண்டமாக நடந்த, மக்கள் நிறைந்த கூட்டத்தில் தி.மு.க.,வின் குடும்ப அரசியலை கண்டித்து மணிக்கணக்கில் வைகோ விடிய, விடிய பேசினார். இப்போது அதே குடும்ப அரசியலால் அதே திருப்புத்துாரிலேயே முதன் முறையாக இரண்டு அணிகளாக செயல்பட்டுள்ளன.

திருப்புத்துாரில் அக். 24ல் நடந்த மருதுபாண்டியர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வரவில்லை. கட்சி வி.ஐ.பிக்களும் வரவில்லை. மாறாக ம.தி.மு.க.,விற்கு ஒதுக்கிய நேரத்தில் அடுத்தடுத்து இரு அணிகளாக ம.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு அணியில் மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், மற்றொரு அணியில் இளைஞர் அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர். ஆனால் இரு தரப்பினரும் அமைதியாக வெளியேறினர். கட்டுக்கோப்பாக காணப்பட்ட ம.தி.மு.க.,வில் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை நியமனத்தால் கட்சி நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ள (ஏ)மாற்றத்தை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகையில், 'தி.மு.க.,வை விட்டு வெளியேறியது முதல் ம.தி.மு.க.,வில் இருக்கிறோம். நாங்கள் வெளியேறியதன் முக்கிய காரணமே வாரிசு அரசியல் எதிர்ப்பு தான். அதை நமது கட்சியில் புகுத்தினால் தலைவரின் இமேஜ், கட்சியின் இமேஜூம் போய் விடும் என்று எங்கள் கருத்தை சொன்னோம். ஆனால் தலைமை கருத்து வேறுபாட்டை வெளிக் கொண்டு வருகிறது, என்றனர்.

மற்றொரு பிரிவினரோ, 'கட்சித் தலைமைக்கு எதிரான மனநிலையில் மாவட்ட நிர்வாகிகள் இருப்பதால் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்குவதாக தலைமைக்கு தெரிவித்தோம். தலைமை எங்களை அஞ்சலி செலுத்த உத்தரவிட்டதால் தனி அணியாக சென்றோம், என்றனர்.

மொத்தத்தில் கட்சி தொண்டர்கள் யார் தலைமையில் இயங்குவது என்ற குழப்பம் ம.தி.மு.க. வில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சீனியர்களை கழட்டி விடும் திட்டமாக உருப்பெறும் என்று கருதப்படுகிறது. ம.தி.மு.க.,விற்கு விதை ஊன்றப்பட்ட திருப்புத்துாரிலேயே அதன் கருத்து வேறுபாட்டிற்கும் விதை ஊன்றப்பட்டுள்ளது.'வரலாறு திரும்புவது' அரசியலில் சகஜம் போலும்...

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X