சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி வேதபுரி ஆஸ்ரமத்தில் ரூ.2.90 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருட்டு: மர்மநபர்கள் விட்டுச் சென்ற 2 சிலைகள் கண்டெடுப்பு

Added : அக் 27, 2021
Share
Advertisement
தேனி:தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமத்தில் ரூ.2.90 லட்சம் மதிப்பிலான 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. திருடர்கள் விட்டுச் சென்ற 2 சிலைகள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.தேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டி ரோட்டில் வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிர்வாகத்தில் இயங்கும் தட்சிணாமூர்த்தி கோயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தாயுமானவர் (ஒரு அடி), மாணிக்கவாசகர்
 தேனி வேதபுரி ஆஸ்ரமத்தில் ரூ.2.90 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருட்டு: மர்மநபர்கள் விட்டுச் சென்ற 2 சிலைகள் கண்டெடுப்பு

தேனி:தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமத்தில் ரூ.2.90 லட்சம் மதிப்பிலான 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. திருடர்கள் விட்டுச் சென்ற 2 சிலைகள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.

தேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டி ரோட்டில் வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிர்வாகத்தில் இயங்கும் தட்சிணாமூர்த்தி கோயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தாயுமானவர் (ஒரு அடி), மாணிக்கவாசகர் (1.5 அடி) ஐம்பொன் சிலைகள் 2004ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தலா முக்கால் அடி உயரமுள்ள வேதவியாசர், ஸநகர், ஸநாதனர், ஸனந்தர், ஸாந்தக்குமாரர், அரை அடி உயரமுள்ள நந்திகேஸ்வரர், கால் அடி உயரமுள்ள பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

நேற்று முன்தினம் இரவு ஆஸ்ரமத்திற்கு அருகே உள்ள வனத்துறை நாற்றாங்கால் பண்ணை வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மூலவர் தட்சிணாமூர்த்தி கோயில் பின்புற சுவரில் உள்ள கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலுடன் சேர்த்து ஐம்பொன் சிலைகளையும் திருடி சென்றனர்.

தேனி எஸ்.பி., பிரவின்உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். திருடர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். நாற்றாங்கால் பண்ணையில் திருடர்கள் விட்டு சென்ற வேதவியாசர், பலி பீடம் உட்பட 2 சிலைகளை கண்டெடுக்கப்பட்டது. சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X