பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை கணக்கெடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, துாய்மை கணக்கெடுப்பு ஊரகம் குறித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது.திட்ட இயக்குனர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் அரசின்
 தூய்மை கணக்கெடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, துாய்மை கணக்கெடுப்பு ஊரகம் குறித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது.

திட்ட இயக்குனர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் அரசின் தனிநபர் கழிப்பறை, திறந்தவெளி கழிப்பறை இல்லாத ஊராட்சி, பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய சுகாதார பணி குறித்து, பொதுமக்கள் கருத்தைதெரிவிக்கலாம்.

இதற்காக துாய்மை கணக்கெடுப்பு ஊரகம், எஸ்.எஸ்.ஜி., - 2021 என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.இதன் வழியாக, தங்கள் மாவட்டத்தின் சுகாதார நிலை குறித்து, கருத்துகளை பொதுமக்கள் பதிவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனித தோமையார்மலை ஆகிய ஒன்றியங்களில், இக்கூட்டம் நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X