ஜாமின் கிடைக்குமா ?: ஆர்யன் கான் மனு இன்றும் தொடருது விசாரணை| Dinamalar

இந்தியா

'ஜாமின்' கிடைக்குமா ?: ஆர்யன் கான் மனு இன்றும் தொடருது விசாரணை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (5)
Share
மும்பை:போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் 'ஜாமின்' மனு மீதான விசாரணை இன்றும் தொடருகிறது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருட்களுடன் சமீபத்தில் பிடிபட்டனர். ஆர்யன் சார்பில் தாக்கல்
 'ஜாமின்' ,ஆர்யன் கான் ,இன்று, விசாரணை

மும்பை:போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் 'ஜாமின்' மனு மீதான விசாரணை இன்றும் தொடருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருட்களுடன் சமீபத்தில் பிடிபட்டனர்.


latest tamil news



ஆர்யன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.அப்போது அவர், ''ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவரிடம் இருந்து போதை பொருள் எதுவும் பறிமுதலும் செய்யப்படவில்லை,” என்றார்.இதையடுத்து விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X