புதுக்கட்சி துவக்கம் ?: இன்று அறிவிக்கிறார் அமரீந்தர் சிங்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சண்டிகர் :பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புது கட்சி துவங்குவது குறித்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், கடந்த சில மாதங்களாகவே முதல்வர் அமரீந்தர் சிங் , முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து
Capt Amarinder Singh to hold press conference tomorrow, may float new partyபுதுக்கட்சி, ?: அமரீந்தர் சிங்

சண்டிகர் :பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புது கட்சி துவங்குவது குறித்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், கடந்த சில மாதங்களாகவே முதல்வர் அமரீந்தர் சிங் , முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இருப்பினும், அமரீந்தருக்கும், சித்துவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வந்தது.


latest tamil news


இதையடுத்து 'அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதையடுத்து அவர் பா.ஜ.,வில் இணைப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அமிரீந்தர்சிங் விரைவில் தனிக்கட்சி துவங்கிடவும், தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திப்பது எனவும் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.இது தொடர்பாக இன்று (அக்.27) செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளிகிறார் அமிரீந்தர் சிங். அப்போது புதுக்கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
27-அக்-202112:46:10 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ்கரன் சொந்த காலில் சூனியம் வைத்து கொண்டான் இனிமேல் நிற்பதற்கும் கஷ்டம்
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
27-அக்-202110:00:52 IST Report Abuse
r ravichandran காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை, ராகுல் காந்தி தான். ஒழுங்காக ஒடி கொண்டிருந்த வண்டியின் கட ஆணியை பிடுங்கி விட்டது. பஞ்சாபில் சிறிதளவு கூட செல்வாக்கு இல்லாத பிஜேபிக்கு கொண்டாட்டம். ஆம் ஆத்மி கட்சிக்கு வழிவிட்டது காங்கிரஸ். ராகுல் காந்தி இருக்கும் வரை, பிஜேபிக்கு கவலை இல்லை. அவரே பிஜேபி கட்சியை 2024 இல், ஆட்சியில் மீண்டும் அமர்துவார்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆசையைப் பாரு!! 80 வயதில் முதலமிச்சர் பதவிக்காக சொந்த கட்சியை காட்டி குடுத்தவர். சித்து தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. இளவரசர் RAW KUL பிரதமர் ஆவது உறுதியோ உறுதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X