பொது செய்தி

இந்தியா

'பைக்' கில் குழந்தை இருந்தால் அதிகபட்ச வேகம் 40 கி.மீ.,

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : இரு சக்கர வாகனத்தில், 4 வயதிற்கு உட்பட குழந்தைகளை ஏற்றிச்செல்வோர், அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பயணிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்வோர் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அதி வேகத்தில் செல்வது வழக்கமாக உள்ளது. இதனை
Safety Guidelines, Kids, Bike, Two Wheelers, Crash Helmet, Safety Harness

புதுடில்லி : இரு சக்கர வாகனத்தில், 4 வயதிற்கு உட்பட குழந்தைகளை ஏற்றிச்செல்வோர், அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பயணிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்வோர் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அதி வேகத்தில் செல்வது வழக்கமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு விதிகள் நேற்று வெளியிடப் பட்டன.


latest tamil news


அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இரு சக்கர வாகனங்களில் 9 மாதம் முதல், 4 வயது வரையிலான குழந்தைகள் பயணித்தால், அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் தான் வாகனம் செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்தின் பின்புறம் பயணிக்கும் குழந்தைகளுக்கும், நவீன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள விபத்தில் இருந்து பாதுகாக்கும் ஹெல்மெட் அணிவிக்கப்பட வேண்டும்.

வாகனத்தை இயக்குபவருடன், பிணைப்பு பட்டைகள் வாயிலாக குழந்தைகள் இணைக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக குழந்தை, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுவது முழுமையாக தடுக்கப்படும். இந்த விதிகள் தொடர்பாக ஆட்சேபணை மற்றும் கருத்துகள் பதிவு செய்ய விரும்புவோர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202120:04:49 IST Report Abuse
முருகன் நாம் நாட்டில் எந்த ஒரு உத்தரவும் முறையாக செயல்படுத்த படுவதில்லை .
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-அக்-202110:54:45 IST Report Abuse
NicoleThomson அதோடு லென் டிசிப்ளின் மிக முக்கியம் என்று போட்டிருக்கலாம்
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
27-அக்-202110:18:09 IST Report Abuse
ramesh ஒரு குழந்தையின் உச்சந்தலையில் உள்ள மண்டை ஓடு எலும்பு வளர்ந்து மூளையை மூடுவதற்கே கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரை ஆகும் .அதுவரை தலையில் உள்ள தோல் பகுதியே மூளைக்கு பாத்து காப்பாக இருக்கும் என்று கூற படுகிறது .இந்த நிலையில் தலை கவசம் குழந்தைகளுக்கு அணிய சொன்னால் அது பாதிப்பை ஏற்படுத்தாதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X