பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: காமராஜரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ந.தேவதாஸ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'நம் நாட்டில், அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அதனால் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தத் தேவையில்லை. இந்திய அரசியல் சாசனம் மட்டுமல்ல, நம் கலாசார பாரம்பரியமும் மதத்தின் அடிப்படையில்
Kamaraj, Kamarajar, K_Kamaraj, காமராஜர்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ந.தேவதாஸ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'நம் நாட்டில், அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அதனால் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தத் தேவையில்லை. இந்திய அரசியல் சாசனம் மட்டுமல்ல, நம் கலாசார பாரம்பரியமும் மதத்தின் அடிப்படையில் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை. இந்தியாவில் எப்போதும் எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலான ஆட்சியும் அமைந்தது இல்லை...' -- இவ்வாறு, டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.


latest tamil news



அவரது பேச்சு, தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி தந்த, முன்னாள் முதல்வர் காமராஜரை தான் நினைவுப்படுத்துகிறது. கடந்த 1969ல் நாகர்கோவிலில் நடந்த இடைத்தேர்தலில், 'காமராஜர் நாடார்' என அவரது சமூகத்தினர் சுவரொட்டிகளை அமைத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் காமராஜர். இதனால், அவருடைய சமூகத்தைச் சேர்ந்த சிலரே, காமராஜருக்கு எதிராக செயல்பட முயன்றனர். இந்நிலையில் எஸ்.சீனிவாச ஐயங்கார், வழக்கறிஞர் எஸ்.சத்தியமூர்த்தி போன்ற அந்தண சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள், காமராஜருக்கு உறுதுணையாக நின்றனர்.


latest tamil news


ஒரு தனி நபரை, ஜாதியின் பெயரால் சுட்டிக்காட்டுவதை என்றுமே விரும்பாதவர், காமராஜர். அதனால் தான் ஈ.வெ.ரா., 'பச்சைத் தமிழன் காமராஜர்' என புகழ்ந்து பாராட்டினார். ஈ.வெ.ரா., மீது மிகுந்த மதிப்புடையவராக இருந்தாலும், அவருடைய பிராமண எதிர்ப்பு கொள்கையை, காமராஜர் ஒருபோதும் ஏற்கவில்லை. ஜாதி, இனம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தன்னை சுருக்கி கொள்ள அவர் நினைத்ததில்லை.

மக்கள் நலனில் காமராஜர் காட்டிய அக்கறையும், நிர்வாக நேர்மையுமே அவரை, 'பெருந்தலைவர்' என போற்றச் செய்தது. மதம், ஜாதியின் பெயரால் கட்சியை நடத்தும் இன்றைய அரசியல் தலைவர்கள் சிலர், இந்த படிக்காத மேதையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
27-அக்-202123:25:02 IST Report Abuse
raja மக்கள் எது நல்லது எது கெட்டது என தெரியாமல் வாழ்வது நல்ல எதிர்காலத்தை அளிப்பதர்க்கு சமம்
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-அக்-202122:20:47 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "அதனால் தான் ஈ.வெ.ரா., 'பச்சைத் தமிழன் காமராஜர்' என புகழ்ந்து பாராட்டினார். " பச்சைத் தமிழன் என்கிற பாராட்டை கன்னடத்தானிடம் பெறவேண்டியிருந்த அவலம் ?
Rate this:
Cancel
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
27-அக்-202121:52:59 IST Report Abuse
Ram Mayilai பெருந்தலைவர் என்றால் அது திரு.கமராஜர்தான் என்றிருந்தது. பெருந்தலைவர் தன்மைக்கு நேரெதிராக குணநலன்களை கொண்ட பிற்கால முதல்வர் பல ஊராட்சிகளின் தலைமையாக உள்ள ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு, பெருந்தலைவர் என பெயர் சூட்டினார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X