சென்னை உஷ்ஷ்ஷ்... ஆளும் கட்சியில் அதிமுக 'பார்முலா'; கட்சியினர் அதிர்ச்சி

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
இந்த ஆண்டு டிச., அல்லது அடுத்த ஆண்டு ஜன., மாதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை கவனிக்குமாறு, கட்சியினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதாவது, மாவட்ட வாரியாக, மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.,வினரிடம், இப்போதே விருப்ப மனுக்களை வாங்கும்படி, மாவட்டச்

இந்த ஆண்டு டிச., அல்லது அடுத்த ஆண்டு ஜன., மாதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை கவனிக்குமாறு, கட்சியினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதாவது, மாவட்ட வாரியாக, மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.,வினரிடம், இப்போதே விருப்ப மனுக்களை வாங்கும்படி, மாவட்டச் செயலர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.latest tamil newsஅந்த நிர்வாகிகள், மக்களிடம் செல்வாக்கு பெற்றவரா, எந்த புகாரிலும் சிக்காதவரா, வெற்றி வாய்ப்பு அவருக்கு எப்படி இருக்கும், தகுதியான நபரா என்பது குறித்து உளவுத் துறையிடம், 'ரிப்போர்ட்' கேட்கப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட் அடிப்படையில், கவுன்சிலர் பதவிகளுக்கும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜெயலலிதா இருந்தவரை, இந்த பார்முலா தான், அ.தி.மு.க.,வில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தி.மு.க.,வில் முதல் முறையாக, இந்த பார்முலா அமலுக்கு வருவதால், அக்கட்சியினர் அதிர்ந்து போய் உள்ளனர்.மக்கள் தொடர்பு துறையில் குழப்பம்!


தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் மாற்றம் நடந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் சென்னையில் கோலோச்சியவர்கள், வெளிமாவட்டங்களுக்கும், அதிகாரமில்லாத பதவிகளுக்கும் துாக்கி அடிக்கப்பட்டனர். ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் முக்கிய பதவிகளுக்கு வந்தனர்.இந்த மாற்றம் முடிந்து,

பல துறைகள் வழக்கமான பணிக்கு திரும்பிவிட்டன. ஆனால், செய்தி மக்கள் தொடர்பு துறையில் மட்டும், இன்னும் குழப்பம் தொடர்கிறது. தி.மு.க., அனுதாபிகள் பலர், தங்களை முக்கிய பதவிக்கு வர விடாமல், உயர் பதவியில் உள்ள சிலர் தடுப்பதாக புலம்புகின்றனர்.


latest tamil newsதலைமை செயலக பி.ஆர்.ஓ.,வாக இருந்தவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உறவினர் என்பதால், ஜூலையில் மாற்றப்பட்டார். அவருக்கு இன்னும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை; காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். அதேபோல், திறமையான பல அலுவலர்களை ஓரம் கட்டி வைத்துள்ளதால், துறையில் பல குழப்பங்கள் தொடர்கின்றன.சங்கத்தினர் 'கமென்ட்' ஆசிரியர்கள் பதிலடி!


பள்ளிகள் திறப்புக்கு தயாராவது தொடர்பாகவும், மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி முறை குறித்தும், ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன், சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது.இதில், 120க்கும் மேற்பட்ட சங்கத்தினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசியபோது, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் குறித்த சந்தேகங்களுக்கு, விளக்கம் கேட்டனர்.அதேபோல், 'இல்லம் தேடி கல்வி திட்டத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும், அரசு பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது' என, திட்டவட்டமாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதிகாரிகளும் 'தன்னார்வலர்கள் மூலமே, இந்த திட்டம் செயல்படுத்தப்படும்' என, உறுதி அளித்தனர். கூட்டம் முடிந்து, வெளியே வந்த நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு எதிராக, 'கமென்ட்' அடித்துள்ளனர். 'நம்ம டீச்சர்ஸ் சிலர் விடுப்பு எடுக்காம, ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் பாடம் நடத்துனாலே பெரிய விஷயம்... இந்த விஷயம் அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்... அதனால அவுங்கள எல்லாம், வேற டூட்டிக்கு கூப்பிட மாட்டாங்க' என, கமென்ட் அடித்ததை கேட்டு, ஆசிரியர்கள் எல்லாம் அதிர்ச்சியாகினர்.

உடனே சுதாரித்து, 'சங்கம், சங்கம்ன்னு சொல்லிட்டு, வேலையே செய்யாமல் 'ஓபி' அடிக்கிறது யாருன்னு தெரியாமலா இருக்கும்...' என பதிலடி கொடுத்தனர்!

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202122:18:54 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நல்ல விஷயங்களுக்கு அதிமுகவை பின்பற்றுவதில் தவறில்லை
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
27-அக்-202119:21:17 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் வழியெங்கும் தோரணம் இல்லை.. முதல்வர் படம் இல்லை..இது அரசு விழாவா?..ஆச்சரியபடுத்திய முதல்வர் ஸ்டாலின்
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
27-அக்-202116:14:24 IST Report Abuse
செல்வம் நேத்து வந்த அண்ணாமலை பார்த்து திமுகவுக்கு என்ன பயம்...ஹாஹாஹா பேரை சொன்னாலே சும்மா அதிருது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X