அயோத்தி ராமஜென்ம பூமியில் அரவிந்த் கெஜ்ரிவால் வழிபாடு

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
அயோத்தி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் நேற்று வழிபாடு செய்தார்.உ.பி.,யில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி.,யில் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே துவக்கிவிட்டார். இதன் ஒரு பகுதியாக, உ.பி.,யின்
Ram Janmabhoomi, Arvind Kejriwal,AAP,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

அயோத்தி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் நேற்று வழிபாடு செய்தார்.

உ.பி.,யில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி.,யில் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே துவக்கிவிட்டார். இதன் ஒரு பகுதியாக, உ.பி.,யின் அயோத்தி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் ராமஜென்ம பூமிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வந்தார். அங்குள்ள ஹனுமன் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: ராமரை தரிசிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அமைந்தது. இதுபோல அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு அமைய வேண்டும். ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.


latest tamil news



கொரோனா தொற்று பரவல் முற்றிலுமாக ஒழிந்து, நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனை செய்தேன். மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தை டில்லி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் ஆண்டுதோறும் 77 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். வைஷ்ணவி தேவி கோவில், ராமேஸ்வரம், துவாரகாபுரி, ஹரித்வார், ரிஷிகேஷ், மதுரா, பிருந்தாவனம் ஆகிய புனித தலங்களுக்கு மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

ரயில் மற்றும் தங்கும் செலவுகளை அரசு ஏற்கிறது. இந்த திட்டத்தில் ராம ஜென்ம பூமியும் இணைக்கப்படும். ராமஜென்ம பூமி கட்டுமான பணிக்கு நன்கொடை அளித்துள்ளேன். நன்கொடை தொகை குறித்து வெளியே சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-அக்-202123:53:22 IST Report Abuse
Milirvan முன்பு ஹனுமான் சாலிசா.. இப்போ அயோத்தி யாத்ரா.. இதன் மூலம் நடுநிலை அப்பாவி ஹிந்துக்களின் ஓட்டுக்களை அமுக்கலாம்.. வேறு விரோத துரோக ஓட்டுக்கள் குரோதத்தோடு வந்து விழுந்து விடும்.. நல்ல பிளான்தான்.. ஆனால் ஒன்று.. கான் கிராஸ் வோட்டு வங்கியின் அடிமடியில் கை வைத்ததாகி விடும்.. ஹிந்து எதிர்ப்பு ஓட்டு பிரியும்.. பிரியங்காவின் புலம்பலை கேட்க தயாராகுங்கள்..
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-அக்-202116:52:09 IST Report Abuse
DVRR இப்போ உ.பி.தேர்தல் இருப்பதாலா??? பேஷ் பேஷ்???ஏமாற்றுவது எங்கள் அரசியல் வாழ்க்கையின் அடிப்படைக்கொள்கை என்று எவ்வளவு நைச்சியமாக சொல்கிறார்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-அக்-202112:42:14 IST Report Abuse
sankaseshan தினமலர் வாசகர்கள் இந்த நம்பிக்கை துரோ கியை நன்கு புரிந்து வைத்துள்ளனர்
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இங்கே சொம்படித்த பலரும் கரையேறிவிட்டார்கள் இவர் பாவம் நம்பிக்கையோடு தொடர்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X