பா.ஜ., மூத்த தலைவரை நாயுடன் ஒப்பிட்ட முன்னாள் கவர்னர்: பா.ஜ., அதிர்ச்சி| Dinamalar

பா.ஜ., மூத்த தலைவரை நாயுடன் ஒப்பிட்ட முன்னாள் கவர்னர்: பா.ஜ., அதிர்ச்சி

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (7)
Share
கோல்கட்டா: பா.ஜ., மூத்த தலைவரான கைலாஷ் விஜயவர்கியாவை, நாயுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட முன்னாள் கவர்னரின் செயல், பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்தது. 'இந்த தோல்விக்கு, மேற்கு வங்க பா.ஜ., பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா
BJP, Kailash Vijayvargiya, dog, Tathagata Roy

கோல்கட்டா: பா.ஜ., மூத்த தலைவரான கைலாஷ் விஜயவர்கியாவை, நாயுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட முன்னாள் கவர்னரின் செயல், பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்தது. 'இந்த தோல்விக்கு, மேற்கு வங்க பா.ஜ., பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தான் காரணம். 'திரிணமுல் காங்.,கில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்கியது தவறு' என, திரிபுரா முன்னாள் கவர்னரும், பா.ஜ., மூத்த தலைவருமான ததகதா ராய் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.


latest tamil newsஇந்நிலையில், ராய் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில், 'வோடாபோன்' மொபைல் சேவை நிறுவன விளம்பரத்தில் இடம்பெறும், 'பக்' இன நாயுடன், கைலாஷ் விஜயவர்கியாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'மேற்கு வங்கத்தில் மீண்டும் வோடாபோன்' என, கருத்து தெரிவித்து உள்ளார். இவரது இந்த பதிவு, பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X